இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 30, 2010

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்

டாக்டர். S.ஆபிதீன்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில்

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாககல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள்,ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள்,லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது.உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில்(இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால்,இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும்தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள :

99658 92706

E-mail : abideen222270@ yahoo.com

கற்பா ? காசு பணமா ? கல்வியா ?



அஸ்ஸலாமு அலைக்கும்,,,

கற்பா ? காசு பணமா ? கல்வியா ?

( தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்து பாருங்கள் . நம் சமுதாயத்தில் ஒழுக்கம் தழைத்தோங்க அனைவரும் துணை செய்யுங்கள், அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் )

கற்பா ? கல்லூரியா ?

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்

சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக,காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில்,அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் - நம் சமுதாயப் பெண்கள்

வெளியே வருகின்றனர்.

வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட்,சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக்

கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப்

படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம்

கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப்

பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி

ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள்

சிந்திக்க வேண்டும்.

பாடமா ? படமா ?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள்

எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில்

உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள

சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில்,

திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில்

அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண்

முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை

அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு

கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான்.

ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை

மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்,கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால்

அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக்

கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது

கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க

வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப்

பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

(நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட,பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

"கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: தப்ரானி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த,வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு

பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

காசு பணமா? கற்பு மானமா ?

படிப்பதற்கு முன்...

சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும். சமுதாயத்தில் அனைத்துப் பெண்களும் இப்படித் தான் என்பது இதன் பொருளல்ல! மார்க்கத்தைப் பின்பற்றி, தங்கள்

கற்பு நெறிகளைப் பாதுகாக்கும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சூழ்நிலை

காரணமாக வழிதவறும் பெண்களைப் பற்றி எச்சரிப்பது மார்க்க அடிப்படையில் நமது கடமை

என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

காலம் காலமாக முஸ்லிம்கள் வெளிநாட்டில் போய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த காலத்தில் சிங்கப்பூர், மலேஷியா என்று பயணம் மேற்கொண்டனர். அப்படிப் பயணம் சென்றவர்கள் இரண்டாண்டுக்கு ஒரு முறை

அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை வந்தாலும் ஆறு மாத காலம் விடுப்பில் வருவார்கள்.

இத்தகைய பயணங்களால் பெரும்பாலும் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அரபு நாட்டுப்

பயணம் துவங்கியது தான் தாமதம். பிரச்சனைகள், மடை திறந்த வெள்ளமாய் சமுதாயத்தை

நோக்கிப் பாய ஆரம்பித்து விட்டன.

வளைகுடாப் பயணம் மேற்கொள்வோருக்குப் பெரும்பாலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அல்லது40 நாட்கள் விடுமுறை தருகிறார்கள். சில கம்பெனிகளில் ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை!

இவ்வளவு குறைந்த விடுமுறையில் வருகின்ற ஒருவர் திருமணம் முடித்து விட்டுச் செல்கின்றார். கணவனின் முகம் மனைவிக்கும்,மனைவியின் முகம் கணவனுக்கும் நினைவில் நன்கு பதியாத இந்தக்

குறைந்த அவகாசத்தில் மீண்டும் வெளிநாடு திரும்பி விடுகின்றார்.

அடுத்து அவர் ஊருக்குத் திரும்புவது இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தான். இதற்கிடையே இங்கே நடப்பது

என்ன? அது தான் இரத்தத்தைக் கொதிக்க வைத்து இதயத்தை வெடிக்கச் செய்யும் அதிர்ச்சி நிகழ்வுகளாகும்.

குடும்பத்திலேயே குள்ள நரி

நம் நாட்டு வாழ்க்கை அமைப்பு முறை கூட்டுக் குடும்பமாகும். அண்ணன், தம்பிகள் எல்லோரும் ஒரே குடும்பமாக, ஒன்றாய் உண்டு ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.

அண்ணன் மனைவி தம்பியிடமோ, தம்பி மனைவி அண்ணனிடமோ பலியாகி விடுகின்றனர். கணவன் ஊரில் இருக்கும் போதே இந்த அபாயம் நடக்கின்றது எனும் போது கணவன் வெளிநாட்டில் இருந்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கணவன் வீட்டிலே அல்லது மனைவியின் வீட்டிலே கூட இந்தப் பேராபத்தும் பெரு விபத்தும் நடைபெறுகின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்களிடம் இஸ்லாம் அதன் தூய வடிவில் வந்து சேரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற)

உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல்: புகாரி 5232

தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் இந்த ஹதீஸை தயவு தாட்சண்யமின்றி போட்டு உடைத்துச் சொல்கின்றது. மார்க்கம் சொல்கின்ற இந்தத் தடுப்பு அரண் கணவன் ஊரில் உலவிக் கொண்டிருக்கும் போதே உடைத்து நொறுக்கப்பட்டு விபத்தும் விபரீதமும் ஏற்படுகின்றது. கணவன் வெளிநாடு சென்று விடுகிறான் எனும் போது ஷைத்தான் முழுமையாகப் புகுந்து விளையாடி விடுகின்றான். இப்படிக் குடும்பத்தில் விளையாடும்

குள்ள நரிக்கு இப்பெண்கள் பலியாவது ஒரு ரகம்.

வேலி தாண்டும் வெள்ளாடு

குடும்பத்தில் நடக்கும் இந்தக் குழப்பம் புகைந்து, பற்றி எரிந்து விவாகரத்தில் போய் முடிகின்றது.

அண்ணன், தம்பிக்கு மத்தியில் மாறாப் பகை, தீராப் பழி ஏற்பட்டு விடுகின்றது.

குடும்பத்தைத் தாண்டிச் சென்று சில பெண்கள், வேலி தாண்டும் வெள்ளாடாகவும் ஆகி விடுகின்றனர். இந்தக் கட்டத்தில் இப்பெண்கள் இஸ்லாத்தை விட்டே ஓடி விடுகின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

வட்டிக்காரன்

பொதுவாக நம்முடைய சமுதாயத்தின் பலவீனத்தைப் பிற சமுதாயத்தவர்கள் நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றனர். வெளிநாட்டுக்குச் செல்கின்றவர்களின் குடும்பங்களை நன்கு நோட்டமிட்டு இரையைப்

பார்த்து வட்டமிடுகின்ற கழுகாக கணக்குப் போட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இதில் வட்டிக்கென்றே பெயர் பெற்ற ஒரு சமுதாயத்தினர் முதலிடம் வகிக்கின்றனர். இவர்களிடம் தான் நம்முடைய சமுதாய மக்கள் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போய் வட்டிக்கு வாங்குகின்றனர். அதன் பின்னர் கணவன் பயணம் போய் விடுகின்றான். இங்கே இவனுடைய மனைவியிடம் வட்டிக்காரனின் புதிய பயணம் துவங்கி விடுகின்றது. கடனும் அடைத்தபாடில்லை. கள்ளத் தொடர்பும் முடிந்தபாடில்லை. இப்படியே கணவனுக்கு விவகாரம் தெரிய வர விவாகரத்தில் போய் முடிகின்றது.

பலி கொள்ளும் பால்காரன்

பொதுவாகவே பால்காரனின் பார்வைகள் பலான பலன் கிடைக்காதா என்ற ஏக்கப்

பார்வைகள் தான். நெல்லை மாவட்டத்தில் ஓர் ஊரில் வெளிநாட்டில் இருக்கின்ற ஒருவரின்

மனைவி பால்காரனிடம் வழிதவறுகின்றாள். 5 மணிக்குக் கொடுக்கும் வழக்கத்தை மாற்றி 7

மணிக்குப் பால் கொடுக்கின்றான்; பலனை அனுபவிக்கின்றான்.

மேய வருகின்ற மேஸ்திரி

இது பால்காரனின் பாலியல் விளையாட்டு என்றால் வீடு கட்டுவதற்குக் காண்டிராக்ட் எடுக்கின்ற கொத்தனார் மேஸ்திரியின் மேய்ச்சலை நினைத்தால் வயிறு எரிகின்றது.இவனுக்கும் நமது சமுதாயப் பெண்களின் கற்பு கறிவேப்பிலையாகி விட்டது. இது போல் வீட்டிற்கு வருகின்ற பொற்கொல்லன், ஆசாரி என்று பட்டியலே நீள்கின்றது.

பிரச்சார ஆலிமின் விபச்சாரம்

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ஒரு பிரச்சார ஆலிமின் பெயர்......... இவனுடைய காமக் களியாட்டத்தைப் பாருங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு விரிசல்! இந்தச் சிறிய இடைவெளியில் இந்த ஆபாச ஆலிம்சா, சமாதானம் செய்கிறேன் என்ற சந்தடி சாக்கில் நுழைந்து விடுகிறான்.

சில துஆக்கள் மூலம் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என்று சதி சரச வலையைப் பின்னுகிறான். ஆலிம் என்ற போர்வையில் கணவனிடம் பேசுகிறான். ஆலிம் என்றால் இந்தச் சமுதாயம் ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு நம்பும் அல்லவா? அது தான் இங்கு நடந்திருக்கின்றது. இவனும் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கிறான்.

போன் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. பிறகு விவகாரம் முற்றிப் போய் ஊர் முழுக்க நாற ஆரம்பித்திருக்கிறது.

கல்லூரி படிக்கின்ற வயது வந்த மகள், +2 படிக்கின்ற மகனுடன் அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு ராஜபாளையம் என்ற ஊருக்கு வந்து விடுகின்றான். சைதை ஜமாஅத் கொந்தளித்துப் போய் ராஜபாளையம் வந்து, கையும் களவுமாகப் பிடித்து பிள்ளைகளைக் காப்பாற்றிச் செல்கின்றனர். மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசதி படைத்த பெண். விவாகரத்துச் செய்யப்படுகின்றாள்.

வைப்புக்கு எதிராக வைஃப் போராட்டம்

விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. இந்த அயோக்கிய ஆலிம்சாவுக்கு ஆராம்பண்ணை என்ற இடத்தில்

புரோகித வேலையும் கிடைக்கிறது. பொறுக்கிகளும் இமாமத் வேலை பார்க்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. "நான் இருக்கும் போதே இவளை எப்படி இழுத்து வரலாம்' என்று இவனது மனைவி போராடுகின்றாள்.

அன்றாடம் தன்னை அலைக்கழிக்கின்ற மனைவியை திட்டமிட்டே இந்த ஷைத்தான் ஒரு ஆசாரியுடன் போகச் சொல்கிறான். அவள் ஆசாரியுடன் சுற்ற ஆரம்பிக்கின்றாள். பூங்கா, ஹோட்டல்கள் என அவ்விருவரும் பொழுதுபோக்க ஆரம்பிக்கின்றனர். இந்தச் சமயத்தில் சமுதாயத்தின் சில இளைஞர்களிடம் இந்தக் கள்ள

ஜோடியினர் சிக்கிய போது தான் காமுக ஆலிம்சாவின் கரை படிந்த வரலாறு தெரிய வருகின்றது.

--