இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

May 23, 2011

பெண்ணே, முக்காடு என்பது


அஸ்ஸலாமு அலைக்கும் ...பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்“

உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில்

சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்… சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?5.சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த

வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம்.

முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.நன்றி அபு முஹம்மத்..... சிங்கப்பூர்

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் ஆண்கள் ஓரளவு விழிப்புணர்வுடன் குரான் ஹதீஸ் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்து கொண்டு வருகிறார்கள் . ஆனால் சகோதரிகளே நம்மில் சிலரை தவிர பலரின் நிலைமையை சற்று சிந்த்தித்து பாருங்கள் .....

அல்லாஹ் போதுமானவன் .....

நன்றி கெட்டவனாக மனிதன் ..!!

அஸ்ஸலாமு அலைக்கும்....

படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான்.


(மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

அல்குரான் - 50 : 16 )

தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் எண்ணுவதுதான்.


அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான்.

மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு ‘அறிவின் ஆணவம்’ போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறாக வியாபரத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் மனிதனை இறை நம்பிக்கையற்றவனாக ஆக்குகின்றது. தன் வியாபாரம் எக்காலத்துக்கும் கைகொடுக்கும், மங்காத மறையாத செல்வம் அதன் மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றான்.


சொத்துக்களின் மீதும் மனிதன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றான். தம்முடைய இந்தச் சொத்து ஐந்தாறு தலைமுறைகளுக்குத் தேறும், எவரும் தன்னை அசைக்கக் கூட இயலாது என எண்ணுகிறான்.

இஸ்லாம் மனிதனுக்குள்ள பணத்தேவையையும், அதை ஈட்டுவதின் வழி முறைகளையும், கல்வியின் அவசியத்தையும், அறிவின் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை ஊற்றையும் கொடுக்கல் வாங்கல் முதலான வியாபரங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், சொத்துக்களின் பங்கீடு முறை பற்றியும் தெளிவாக எடுத்து கூறுகின்றது.


இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. எந்த காரியத்திலும், எந்தச் செயலிலும் இறை நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் மானிட இனத்துக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில்


நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)


நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)


காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)


செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது – நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)


அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.

வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)நன்றி - புலவர் செ.ஜஃபர் அலீ

Mar 4, 2011

மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம்தமிழக சட்டசபை தேர்தலுக்கு 54 ஆயிரம் வாக்குசாவடிகள்:

மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் 10-1-2011 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்து 295 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேர்.

தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இதன் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்து 615. சிறிய தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேலூர் உள்ளது.

இது தனித்தொகுதி ஆகும். இதில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 181 பேர் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய மார்ச் 26-ந் தேதி கடைசிநாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதி நடக்கிறது.

வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாள். அன்றுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது.

வாக்குகள் எண்ணிக்கை மே 13-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பணி மே 16-ந் தேதி முடிந்துவிடும். தமிழகத்தில் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இவற்றில் 19 ஆயிரத்து 560 வாக்குச்சாவடிகள் நகர்ப்புற பகுதிகளிலும் 36 ஆயிரத்து 456 வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளிலும் அமைந்துள்ளன.

புகைப்பட வாக்காளர் பட்டியல் 99.85 சதவீதம் உள்ளது. தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் உள்பட மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 519 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த தேர்தலுக்காக மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக 70 ஆயிரத்து 4 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 98 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்
Thanks :- mangudi kani

Feb 3, 2011

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

ஜன.30:வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.

கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.

பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).

கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் "பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்" என்று அடம் பிடித்தனர். நான், "இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்" என்று சொன்னேன்.

நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், "அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். "ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்" என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.

உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.

உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் "PIZZA HUT ஹலாலா?" என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு "ஹலால்தான்" என்றார்கள். ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே.. என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, "அதனால் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள்.

மற்ற சிலர், "நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்" என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் "PORK என்றால் பன்றியின் இறைச்சி" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.

இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம். "இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்" என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம் "In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)" என்று தெரியப்படுத்துங்கள்.

இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/
2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
and Click CHEESE AND PEPPERONI menu.

source : http://paalaivanathoothu.blogspot.com/2011/01/pork-pepperoni.html

Jan 25, 2011

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்


வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு

புதுடெல்லி,ஜன.24:இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்ட சூழலில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின் குற்றங்களுக்கு பலிகடாவாகி பல்வேறு கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு நிரபராதிகளாக நிரூபிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் தேவையான அனைத்து சட்டரீதியான, பொருளாதரீதியிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற சமுதாய அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய மலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளில் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோருக்கு இதுவரை ஜாமீன் கூட கிடைக்கவில்லை. 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைமையில் சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் போன்ற பயங்கரவாத அமைப்புகள் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(சிமி), ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி போன்ற தடைச் செய்யப்பட்ட இயக்கங்கள் மீது குற்றம் சும்த்தப்பட்டன. பின்னர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது ஹிந்துத்துவா அமைப்புகள்தான் என்பது ஹேமந்த் கர்காரே நடத்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும், தற்போது ராஜஸ்தான் ஏ.டி.எஸ், சி.பி.ஐ, என்.ஐ.ஏ போன்ற புலனாய்வு ஏஜன்சிகள் நடத்திய விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்நிலையில் பொய்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சி.பி.எம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கூடுதலான குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
(http://paalaivanathoothu.blogspot.com/2011/01/blog-post_2290.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/bLHr+(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81)&utm_content=Yahoo!+Mail)

Jan 24, 2011

ஒபாமாவிற்கு விலைவுயர்ந்த பரிசுகளை தந்தவர் சவுதி மன்னர்


அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு வெள்ளை மாளிகையின் முதல் ஒரு வருடத்தில் அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளை வழங்கியவர் சவுதி மன்னர் என்று அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டு உள்ளது. சவுதி மன்னர் அப்துல்லாஹ் 2009 ஆம் ஆண்டில் மட்டும் ஒபாமா குடும்பத்திற்கு 190,000 டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கொடுத்து உள்ளார். இதன் இந்திய மதிப்பு 86 லட்சம் ரூபாய். இதில் ஒபாமாவின் மனைவிக்கு கொம்பு, வைர நகைகள், காதணி, மோதிரம், காப்பு மற்றும் கழுத்து மாலை என அவருக்கு மட்டும் அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொடுத்து உள்ளார். ஆனால் இது போன்ற நகைகள் அவர் அணியும் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் அப்துல்லாஹ்வை அடுத்து அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியவர் என்ற இரண்டாவது இடத்தில் இருப்பவர் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுச்கோம் (Silvia Berluscom). இவர் பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்து இருக்கிறார் என்றாலும் அதில் ஒரு லட்சத்திற்கு விதவிதமான collar tie(சவடி இழுவைமரம்) கொடுத்து இருக்கிறார்.

சீனா அதிபர் ஹு ஜின்டோ (Hu Jintao) பத்து லட்சம் மதிப்புள்ள பட்டு பூத்தையல்(silk embroidery) பரிசளித்துள்ளாராம். மேலும் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கொழி (Nicolas Sarkozy) இரண்டு லட்சம் மதிப்புள்ள கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) கம்பெனி பரிமளப் பை(Perfume) ஒன்றை வழங்கியுள்ளார்.

பிரிட்டிஷ் அதிபர் கோர்டன் ப்ரௌன் (Gordon Brown) பேனா, பேனா ஸ்டாண்ட் மற்றும் வின்ஸ்டன் சர்சில் பற்றிய சுயசரிதை என இவர் வழங்கியுள்ள பரிசுகளின் மதிப்பு எழரை லட்சம் இருக்குமாம்.

இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரேஸ்(Shimon Peres) ஒரு பெண் புறாவை பறக்க விடுவது போன்ற ஒரு வெண்கலச் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு மூன்றரை லட்சம்.

ரோமன் கதோலிக மார்க்கத்தாரின் பிரதான குருவான போப் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் மற்றும் புத்தகங்களை கொடுத்துள்ளார்.

பிரிட்டனின் எலிசபெத் ராணி (Elizabeth Rani) தன்னுடைய ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு நாப்பதாயிரம்.

பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas)இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கியுள்ளார், அதில் நாலாயிரம் மதிப்புள்ள ஒலிவ் எண்ணெய்களும் அடங்கும்.

Thanks :- jaffer shadiq

மீடியாக்களும் முஸ்லிம் உலகமும்


இன்றைய மீடியாக்களை ஒரு வரியில் சொல்லுதென்றால், ’கருப்பை வெள்ளையாகவும் வெள்ளையை கருப்பாகவும் சித்தரிக்கும் ஒரு ஊடகம்’

கால் பந்து வீரர்களுக்கிடையில் சிக்குண்டு அங்கும் இங்கும் அடித்து உதைக்கப்படும் பந்துக்குச் சமமானவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் அல்லது முஸ்லிம் பெயர் தாங்கி உண்மையை வாய் திறந்து பேசினால் அவனுக்கு உலக மீடியாக்கள் சூட்டும் பெயர் தீவிரவாதி.

உலக மீடியாக்களுக்கு இருக்கும் முக்கிய பணிகளில் ஒன்று உலக முஸ்லிம்களை தீவிர வாதிகளாக, சமூக விரோதிகளாக, பிரச்சினைகளின் ஆணி வேருகளாக சித்திரிப்பதாகும்.

அதே போல் மீடியாக்களை கையில் வைத்திருக்கும் சில முஸ்லிம் அமைப்புக்களுக்கு இருக்கும் முக்கிய பணி, தனது சமூகத்தைச் சார்ந்த பிற இயக்கங்களின் குறைகளை தூற்றி அல்லது அவர்களை குற்றவாளிகளாக வசைபாடி உலக மேடையில் நிறந்தீட்டி விடுவதேயாகும்.

இதுவே உலக மீடியாக்களுக்கும் முஸ்லிம் மீடியாக்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.
முன்னால் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தனது நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ஆயும் ஏந்திய போது அவருக்குப் பெயர் முஸ்லிம் தீவிரவாதி,

சும்மா கிடந்த சதாம் ஹுசைனை உசுப்பிவிட்டு சொத்துக்களை பறித்து, உயிர்களை சூரயாடிய அமெரிக்காவுக்கு பெயர் சமாதான நீதிபதி.

முஸ்லிம்கள் அமைதியாக வாழும் பலஸ்தீன் பூமி துண்டாக்கப்படும் போது அதை தட்டிக்கேட்டு சிறு கற்களை ஆயுதமாக எடுத்த போது அவர்களுக்கு உலக மீடியாக்கள் சூட்டிய பெயர் முஸ்லிம் தீவிரவாதிகள்.

அதே பலஸ்தீன பூமியில் சண்டித்தனத்துடன் புகுந்து, நரி நாட்டியம் போட்டுக்கொண்டு நவீன ஆயுதம் ஏந்தி, இறத்த ஆற்றை ஓட்டும் யூதர்களுக்குப் பெயர் சுதந்திர போராளிகள்.

இவர்களைத்தான் அல் குர்ஆன் இப்படி சொல்லுகிறது;

’நீங்கள் பூமியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் ’நாம் தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். (அல் குர்ஆன் 02 : 11)

உலகில் முஸ்லிம்கள் ஆயுத முனையில் பாதிக்கப்படுவதை விட மீடியாக்களினால் பாதிக்கப்படும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனை பல இஸ்லாமிய நாடுகள், முஸ்லிம் அமைப்புக்கள் தெளீவாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

மாற்றங்கள் தேவை சார்பாக உலக முஸ்லிம்களுக்குச் சொல்வது.......

ஆடம்பர வாழ்க்கை, அதிக வீண்விரயம் என்று நாட்களை கடத்தும் தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தனது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இன்று பாடசாலை மாணவர்கள் முதல் FAfaffபல் விழுந்த கிழவன் வரை பயன்படுத்தும் Facebook, gmail, yahoo, hotmail, tweeter, skype போன்ற அனைத்தும் நமக்குக் கிடைத்த இலவச ஊடகமே என்பதை கவனத்தில் கொண்டு அவைகளை பயன்படுத்தி எமது சமூகத்திற்குக் தேவையான செய்திகளை வழங்க முன்வர வேண்டும்.

ஆனால் (Facebook, gmail, yahoo, hotmail, tweeter, Skype) இவைகள் மூலம் சினிமாத்துறையை இலவசமாக விளம்பரப்படுத்துவதற்கும் தேவையற்ற ஆபாசங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதை பரவலாக பார்க்க முடிகிறது.

இந்த நிலை மாற்றப்படுவது எமது சமூகம் மீடியாவுக்கு செய்கின்ற மிக முக்கிய பணியாகும்.

வெள்ளி மேடைகள் முழுதும் இதை தலைப்பாகப் பேசி மக்கள் கருத்துக்களை பெற்று அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க கூட்டாக முன்வர வேண்டும்.

ஆங்காங்கே போராட்டங்கள் என்ற பெயரில் பல லட்ச மக்களை ஒருகிணைக்கும் அமைப்புக்கள் அதே பொதுமக்களிடமிருந்து பல லட்சம் ரூபாக்களை சேகரித்து ஒரே இரவில் எமக்குத் தேவையான மீடியாக்களை உருவாக்க வேண்டும்.

இஸ்லாமிய பிரச்சார நோக்கங்களை முன்னெடுக்கும் அமைப்புக்கள், குழுக்கள் நவீன மீடியாக்களை சிறந்த முறையில் கையாளும் பயன்படுத்தும் நிலைக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

சமூக சேவை நிருவனங்கள் தங்கள் செயற்திட்டங்களில் மீடியக்களின் பங்களிப்பை செலுத்துவதுடன் அதற்காக செலவிடுவதற்கும் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரிகள், பாடசாலைகளில் மீடியாக்களின் நிலை, இஸ்லாத்த்ற்கும் முஸ்லீம்களுக்கும் மீடியாவின் அவசியம், இன்றைய மீடியாக்களின் போக்கு குறித்து கருத்தறங்குகள், வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கலகங்களில் ஒவ்வொரு பீடங்களிலும் ஒவ்வொரு வருடங்களிலும் சமூக பிரச்சினைகளை தலைப்பாகக் கொண்டு பல ஆயுவுகள் கருத்துக் கணிப்பீடுகள் நடாத்தப்படுகின்றன,

அதனால் பல விஞ்ஞான, சமூகவியல் கருத்துக்களை மக்கள் மன்றங்களில் முன்வைக்கிறார்கள், ஆனால் இஸ்லாமிய அல்லது முஸ்லிம் பல்கலைக் கலகங்களில் இவ்வாறன செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே பின்பற்றப்படுகின்றன.

அண்மையில் ஒரு பல்கலைக்கலகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு; ’ஒரு மனைவி எந்த வகையான முத்தத்தை தனது கனவரிடத்தில் எதிர்பார்க்கிறால்.?’

இதற்கான பல புதிய ஜோடுகளை சந்தித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு தங்கள் ஆய்வை சமர்பித்தார்கள்.

ஆனால் எமது பல்கலைக்கலக மாணவர்கள் கடைசி வகுப்பில் சமர்பிக்க வேண்டிய ஆய்வுக்கு முன்னைய வருட மாணவன் செய்த ஆய்வை பார்த்து எப்படியாவது கொப்பியடித்து சமர்பிப்பது, வெளிவருவது என்று தொடர்கிறது ஆய்வு தொடர்பான கதை.

இந்த நிலை மாறி சமூகத்திற்குத் தேவையான அன்றாடம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு ஆய்வுப் பொருளாக நினைத்து சமூகத்திற்கு பயனளிக்கும் நடவடிக்கைகளை கொடுக்க முன்வர வேண்டும். அநத ஆய்வுகளில் முஸ்லிம் மீடியாக்கள் பற்றிய தலைப்புக்கள் முதன்மையானதாக கவனத்தில் கொள்ள பட வேண்டும்.

முஸ்லிம் நாடுகளில் இருக்கும், இயங்கும் மீடியாக்கள் சர்வதேச மொழிகளில் சமூகத்திற்குத் தேவையான செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உலக நாடுகளில் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள், உரிமைகள் சேதப்படுத்தப்படும் போது அதன் யதார்த்த நிலையை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டுவருவதில் பாகுபாடு காட்டாது இருக்க வேண்டும்.

ஏகாதிபத்திய சார்பு கொள்கையை பின்பற்ற நினைக்கும் முஸ்லிம் நாடுகள் தம் மக்களையே காட்டிக்கொடுக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது.

கடைசியாக....

இதெல்லாம் புதிதல்ல, நாங்கள் இதெல்லாம் செய்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் தங்கள் முயற்சியின் விளைவு, பயன் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

அப்போது தான் நாம் உலகில் தலை நிமிர்ந்து வாழும் சிறந்த சமூகமாக உருவெடுக்க முடியும்.

Thanks :- http://changesdo.blogspot.com/2010/12/blog-post.html

ஊனமுற்றுப் பிறப்பவர்களும் இருக்கிறார்கள்
கண்கள் இல்லாத போது பாலின் நிறத்தை க்ண்டுகொள்ள ஆர்வப்படுவது, காதுகள் இல்லாத போது காகத்தின் சத்தத்தை கேட்கத்துடிப்பது, கைகள் இல்லாத போது கடலில் நீந்திப் பார்க்க ஆசைப்படுவது எல்லாமே இயல்புதான்.

இருப்பவர்கள் இருப்பதைக் கொண்டு ஒரு நாளும் திருப்திப்படுவதுமில்லை, அதற்கு நன்றி செலுத்துவதுமில்லை.

ஊனமுற்றுப் பிறப்பவர்களும் இருக்கிறார்கள், பிறந்தபின் ஊனமாகுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் ஊனமுற்ற எல்லோறும் அதை ஒரு சாட்டாக வைத்து அமைதியாக ஒதுங்குவதுமில்லை.

தன்னால் ஏதாவது சாதிக்கமுடியுமா என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு முயற்xசிப்பவர்கள் சாதிக்கிறார்கள்.

உண்மையில் மனிதர்கள் செய்யும் சில தவறுகள், குற்றங்கள் காரணமாக ஏனைய சில மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அது கூட ஊனமுற்றவர்கள் பிரப்பதற்கு ஒரு காரணம்.

இரண்டாம் உலக மகா யுத்த்த்தில் போது ஜப்பான் நாகசாய், நிரோசிமா நகரங்களில் நடந்த அனு ஆயுத தாக்குதல் காரணமாக இன்றும் பல குழந்தைகள் அந்த நாட்டில் ஊனமுற்றவர்களாக பிறக்கிறார்கள்.

ஊனமுற்ற படைப்புக்களில் மரணத்திற்கு பின்னுல் மனிதர்கள் எழுப்பப்டுவதற்கான நியாயம் நிறூபிக்கப்படுகிறது.

மனிதர்கள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு நாம் அறியாத, அல்லாஹ் நாடுகிற அவன் திட்டமிட்டுள்ள பல காரணங்கள் இருக்கலாம்.

அதனை விளங்கி நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடத்தில் நமது ஆரோக்கியத்த்றிகாக பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வே மறைவானவற்றை அறியக்கூடியவன்.

Jan 21, 2011

2010 ஆண்டின் சிறந்த மனிதராக.........

ஆங்கில இதழான டைம், ஆண்டு தோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இந்த ஆண்டில், இந்த பத்திரிக்கை, சிறந்த மனிதராக, பேஸ்புக் நிறுவ னரான மார்க் ஸக்கர்பெர்க் கினை அறிவித்துள்ளது.

இவர் உலகில் வாழும் மிக இளவயது கோடீஸவரர்களில் ஒருவர். டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்து அறிவிக்கப் பட்ட ஆண்டின் சிறந்த மனிதர்களில், 1927 ஆம் ஆண்டிற்குப் பின் அறிவிக்கப்பட்டவர்களில் மிகக் குறைந்த வயதுடையவரும் இவரே.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் இதே போல 1952 ஆம் ஆண்டில் அறிவிக்கப் படுகையில் இளவயது டையவராகவே இருந்தார். ஆனால், ஸக்கர் பெர்க் அவரைக் காட்டிலும் வயதில் இரண்டு வாரங்கள் குறைவாகவே உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம் இதழ், மனித சமுதாயப் பண்பாட்டில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியவருக்கு இந்தப் பெருமையை ஆண்டு தோறும் தருகிறது. சமுதாயத்தின் மீதான இந்த தாக்கம், நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம்.

2007 ஆம் ஆண்டில் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின், 2008 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா இந்தப் பெருமையைப் பெற்றனர். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதில் மாற்றங் களைக் கொண்டு வந்தவர் என்று மார்க் ஸக்கர் பெர்க்கினைப் பாராட்டியுள்ளது

டைம் இதழ். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில், தன் 19 ஆவது வயதில், பேஸ்புக் இணைய திட்டத்தினை ஸக்கர் பெர்க் தொடங்கினார். இன் றைக்கு ஏறத்தாழ 55 கோடிமக்களைக் கொண்டதாக பேஸ்புக் இயங்கி வருகிறது. ஸக்கர் பெர்க் இந்த பாராட் டினைத் தன்னுடன் பணியாற்றும் சிறிய குழுவினருக்கு சமர்ப்பித்துள்ளார்.

இந்த குழுவின் உழைப்புதான், உலகை விரியவைத்து, பல கோடி மக் களை இணைத்துள்ளது என்றும் கூறி உள்ளார். இதில் ஒரு பகுதியாகத் தான் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸக்கர் பெர்க்கின் தயாள குணமும் இந்த பெருமையை அடைவதற்கு வழி வகுத்திருக்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூ ஜெர்ஸி பள்ளி இயக்கத்திற்கு, ஐந்து ஆண்டு காலத்தில், 10 கோடி டாலர் தருவ தாக வாக்களித்து வழங்கினார்.


Read more: http://therinjikko.blogspot.com/2011/01/2010.html#ixzz1BgWvClgb

முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின்........


சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது.

இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன் கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே!


1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free edition):

இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செயல்பாடு பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது. இன்னும் தொடர்கிறது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இந்த தளத்திலிருந்து டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 8,43,17,112. கிடைக்கும் தள முகவரிhttp://download.cnet.com/AVGAntiVirusFreeEdition2011/30002239_410320142.html


2.அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் (Avast Free Anti Virus):

5,26,48,408 முறை டவுண்லோட் செய்யப்பட்ட வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/AvastFreeAntivirus/30002239_410019223.html


3. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal):

இதுவும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் புரோகிராம். இது 4,21,65,868 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி :http://download.cnet.com/AviraAntiVirPersonalFreeAntivirus/30002239_410322935.html


4.யு-ட்யூப் டவுண்லோடர்(YouTubeDownloader):

அனைவரும் ரசிக்கும் யு-ட்யூப் வீடியோ படங்களைக் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருவதில் பல புரோகிராம்கள் இருந்தாலும், இந்த புரோகிராமினைப் பலரும் விரும்பி டவுண்லோட் செய்துள்ளனர். எண்ணிக்கை: 3,00,68,100. செல்ல வேண்டிய தள முகவரி :http://download.cnet.com/YouTubeDownloader/ 30002071_410647340.html


5. மால்வேர் பைட்ஸ் (Malwarebytes AntiMalware):

மால்வேர் தொகுப்புகளுக்கு எதிரான இந்த புரோகிராம் 2,57,99,006 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/ MalwarebytesAntiMalware/30008022_410804572.html


6. ஆட் அவேர் பிரி இன்டர்நெட் செக்யூரிட்டி (AdAware Free Internet Security):

விளம்பரங்களாக வந்து நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை விலை பேசும் புரோகிராம்களைத் தடுக்கும் புரோகிராம். இது 2,03,75,957 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைத் தரவிறக்கம் செய்திடச் செல்ல வேண்டிய முகவரி:http://download.cnet.com/AdAwareFreeInternetSecurity/30008022_410045910.html


7.அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் பிரி (Advanced SystemCare Free)

சிஸ்டம் சரியாக இயங்க பாதுகாப்பு தரும் புரோகிராம். இது 1,95,44,950 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் முகவரி : http://download. cnet.com/AdvancedSystemCareFree/30002086_410407614.html


8.விண் ஆர்.ஏ.ஆர். ( (Win RAR):

பைல்களைச் சுருக்கித் தரும் புரோகிராம். இது சிநெட் தளத்திலிருந்து 1,94,31,244 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. பெறுவதற்குச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://download.cnet.com/WinRAR32bit/30002250_410007677.html


9.டீம் வியூவர் (Team Viewer):

இந்த புரோகிராம் மூலம் நீங்கள் அனுமதி அளிக்கும் இன்னொரு கம்ப்யூட்டரில் எவ்வளவு தூரத்திலிருந்தும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதனை இயக்கவும் செய்திடலாம். 1,57,22,955 முறை இது டவுண்லோட் செய்யப் பட்டுள்ளது. இதனைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி:http://download.cnet.com/ TeamViewer/30007240_410398150.html


10.கேம் பிராக் வீடியோ சேட் (Camfrog Video Chat):

இந்த புரோகிராம் வீடியோ மூலம் தொடர்பு கொள்ள உதவிடுகிறது. இது 14155432 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி:http://download.cnet.com/CamfrogVideoChat/30002348_410265538.html


மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தும், தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இணைய தள இதழின் பக்கங்களில் இருந்து டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இவை தவிர, இந்த புரோகிராம்களை வழங்குபவர்களின் இணைய தளம் மற்றும் பிற தளங்களிலிருந்தும் இவை டவுண்லோட் செய்யப்பட்டிருக்கலாம்.


Read more: http://therinjikko.blogspot.com/2011/01/2010_05.html#ixzz1BgUU2xyU

ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் ...........


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை!1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?

10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?

16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?

18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

Source: http://therinjikko.blogspot.com

Jan 14, 2011

மண்டை காயும் தத்துவங்கள்

மண்டை காயும் தத்துவங்கள்

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்

ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.

நெஞ்சு வலி இதயம் அடிக்கும் எச்சரிக்கை மணி


நெஞ்சு வலி இதயம் அடிக்கும் எச்சரிக்கை மணி

தனது பிரச்சனையை உணர்த்துவதற்காக இதயம் எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த எச்சரிக்கை மணிதான் நமக்கு இதய வலியாக (நெஞ்சு வலி) பிரதிபலிக்கிறது. நெஞ்சுவலி என்பது நமது மார்பின் நடுப்பகுதியில் உணரப்படுவது. இந்த வலியானது நெஞ்சு எலும்பின் நடுப்பகுதியில் ஏற்படும் என்றாலும் சில சமயங்களில் இடது மேல் கை, கழுத்து, தாடை போன்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பலவகையான இன்னலுக்கு ஆளாகும் இதயமானது தனது அவல நிலையை உணர்த்தும் அபயக் குரல்தான் நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.

தீவிரமாக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நடப்பது, செங்குத்தான மலைப் பகுதியில ஏறுதல், கடுமையான வெப்பம், கடுமையான குளிர், கடுமையான உடல் சோர்வு, கடுமையான இன இறுக்கம், அளவுக்கு அதிகமாகக் கோபம் கொள்ளுதல், வயிறு புடைக்க உணவு சாப்பிடுதல் போன்ற சூழல்களில் நெஞ்சு வலி ஏற்படக்கூடும். இந்த வலி ஏன் ஏற்படுகிறது? இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தை மகா தமனியின் முதல் நிலைக் கிளைகளான இதயத் தமனிகளிடம் இருந்து பெறுகிறது. இவை, சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து இதயம் முழுவதும் வலைபோல் படர்ந்துள்ளன. நாம் அன்றாடம் நியாயமான, அளவான வேலைகளைச் செய்யும் போது இதயத் தமனிகள் இதயத் தசைகளுக்குத் தேவையான உயிர்வெளி, ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் ஆகியவற்றை அளிக்கின்றன.

ஆனால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இதயத்துக்கு வேலை தரும்போது அந்தச் சுமையைச் சமாளிக்க முடியாமல் இதயத் தமனிகள் திணறுகின்றன. இதன் காரணமாக இதயத் தசைகள்போதுமான உயிர்வளிச் சத்துக்களைப் பெற முடியாமல் இதயத்தில் வலி ஏற்படுகிறது. நாம் பிறக்கும்போது தூய்மையாகவும், நன்கு நெகிழும் தன்மையுடையதாகவும் இதயத் தமனிகள் இருக்கின்றன. காலப்போக்கில் இதயத் தமனிகளின் உள் பகுதியில் பலவகையான கொழுப்புப் பொருள்கள் படிந்து தமனிகளின் உள்விட்டமானது கொஞ்சம், கொஞ்சமாக அடைபட்டு குறுகிவிடுகின்றன.

அதோடு, தமனிகள் தங்களின்நெகிழும் தன்மையையும் இழந்து தடித்துவிடுகின்றன. இதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபடுவதால் இதய தசைகளில் வலி ஏற்படுகிறது. இதயத்துக்குப் போதுமான ஓய்வு கொடுக்காமல் அளவுக்கு அதிகமாக அதை வருத்துவதால் ஏற்படும் வலி என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப நிலையில் இதய வலியைக் கண்டறிந்துவிட்டால் எளிதாக அதைச் சமாளித்துவிட முடியும்.ஆனால் இதய வலியைச் சமாளிக்க வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் தேவைப்படும். போதுமான ஓய்வு இல்லாமல் தங்கள் உடலை வருத்திக்கொள்பவர்களும் அடிக்கடி களைப்படைபவர்களும்தான், இதய வலிக்கு அதிகமாக ஆளாகிறார்கள்.எனவே, வலியில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற வேண்டும் என்றால் முதல் கட்டமாக முழுமையான ஓய்வு, உடல் அளவிலும், மனதளவிலும் தேவை.

அன்றாட வேலைச் சுமைகளை ஓரளவு குறைத்துக் கொள்வதோடு அல்லாமல் காரணம் இல்லாமல் அடிக்கடி கோபப்படுதல் போன்ற இதய வலியை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிறந்த தற்காப்பு முறையாகும் இதய வலிக்கான சிகிச்சையில் மருந்துகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இதய வலிக்குத் தற்போது பலவகையான மருந்துகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, நோயின் தன்மை, இதய வலியின் தன்மை, உடலின் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு இதய மருத்துவர் தகுந்த மருந்தைப் பரிந்துரைப்பார். இதய மருந்துகள், குறுகிய இதயத் தமனகளை விரிவடையச் செய்கின்றன. இதன் மூலமாக ரத்தமானது தங்கு தடையில்லாமல் இதயத்துக்கு சென்று இதயத்துக்குத் தேவையான உயிர்வளியையும், சத்துகளையும் அளிக்கத் துணை புரிகின்றன. இதனால் இதய வலியானது தற்காலிகமாக நீங்குகிறது.இதய வலியை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளில் நைட்ரேட் வகை மருந்துகள் பீட்டா பிளாக்கர்ஸ் கால்சியம் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை முக்கியமானவை.

இவற்றில் நைட்ரேட் வகை மருந்துகளை குறுகிய நேரத்தில் செயல்படும் மருந்துகள், நீண்ட நேரம் செயல்படும் மருந்துகள் என இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு வகையான செயல்திறன் கொண்ட மருந்தாக அமைந்திருக்கிறது இதய வலியைப் போக்கும் பலவகையான மருந்துகளை ஒரு நோயாளி போதுமான அளவு தொடர்ந்து பயன்படுத்தியும் தக்க பலன் கிடைக்கவில்லையென்றால் வேறு சில மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும். இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளின் தன்மையை அறிந்து கொள்ள முதலில் ஆஞ்சியோகிராபி செய்யப்பட வேண்டும் இதயத் தமனிகளில் உள்ள அடைப்பின் தன்மை சிறிய அளவில் இருந்தால் ஆஞ்சடியோபிளாஸ்டி முறையின் மூலமாக அடைப்புகள் மிகவும் அதிகமாக இருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்வதுதான் அவற்றை நீக்குவதற்கான நிரந்தர சிகிச்சையாக இருக்க முடியும். இத்தகைய அறுவைச் சிகிச்சையின் மூலம் இதயத்துக்கு நேரிடையாக ரத்த ஓட்டம் கிடைக்கும் இதய வலியால் பாதிக்கப்படுபவர்கள் கீழ்கண்ட தற்காப்பு முறைகளைக் கையாண்டு அது தீவிரமான நிலையை அடையாமல் தடுக்க முடியும் அடிக்கடி இதய வலிக்கு ஆளாகுபவர்கள் அந்த வலியை அலட்சியம் செய்யாமல் இதயம் விடும் அபயக்குரலாகக் கருதி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஏற்கனவே ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மருத்துவர்களின் துணையுடன் தக்க மருந்துகளின் மூலமாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை சரியான அளவில் வைத்திருக்கும் வகையில் அன்றாட உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.உடல் பருமன் உள்ளவராக இருந்தால் உடலின் எடையைக்குறைக்க வேண்டும் ஏற்கனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் புகைப் பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.வாரத்தில் குறைந்தது 5 நாள்களாவது உடற்பயிற்சி செய்து உடலை வலுவாக வைத்துக் கொள்வதும் முக்கியம்

பெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்?-


பெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்?-

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின் கண்கள் உங்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவே அங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.

• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.

• உங்கள் காதலரோ அல்லது கணவரோ விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.

• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.

• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.

• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!
---------

Jan 12, 2011

டாப் 10 ஊழல் (இந்தியாவில்)

ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாவற்றிலேயும் டாப் டென் பார்த்தாச்சு......இதிலும் பார்த்துவிடுவோம்.......
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:
இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.
இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)
ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)
உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)
பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!
நான் படித்து மலைத்து போய்விட்டேன்....நீங்களும் மலைக்க வேண்டாமா......அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்........

Jan 10, 2011

வேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் !

பலருக்கும் ஒரு வேலை வேலை வாங்க வேண்டும் என்பது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கும். வேலை கிடைத்தபிறகோ அந்த வேலையில் அசத்துவது எப்படி எனும் சூட்சுமம் புரிவதே இல்லை. சிலர் சடசடவென உயரத்தில் போய்விடுவார்கள். சிலர் கடைசிப் படிக்கட்டையேக் கட்டிக் கொண்டு கலங்குவார்கள்.

சரி, வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் அலசுவோமா ?

1. வேலை கிடைத்ததும் எல்லாம் முடிந்துவிடவில்லை. இது தான் ஆரம்பமே. உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிப்பது தான் முக்கியம். புதிதாக வேலைக்குச் சென்றிருக்கும் உங்களை எல்லாக் கண்களும் ரகசியமாய்க் கண்காணிக்கும். எனவே வேலையில் கருத்தாய் இருங்கள்.

2. உங்கள் வேலைக்குத் தேவையான தகவல்களைக் கற்பதில் தயக்கம் காட்டாதீர்கள். அலுவலகத்தில் கடை நிலை ஊழியனிடம் கூட விவரங்கள் கேட்டுப் பெறலாம். முதல் சில மாதங்கள் மட்டும் தான் மற்றவர்களிடம் நிறைய விஷயங்கள் கேட்க முடியும். ரொம்ப நாளுக்கு அப்புறம் கேட்டால் “இன்னுமா இதெல்லாம் தெரியல” என ஏளனமாய்ப் பார்ப்பார்கள்.

3. அடுத்தவர்களுடைய வேலையைப் பங்கு போட்டுக் கொள்வதில் தயக்கம் வேண்டாம். வேலையை முடித்தோமா, கிளம்பினோமா என்று இருந்தால் கேரியர் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும். சகல கலா வல்லவன் ஆகவேண்டுமென்றால் அடுத்தவர் செய்யும் வேலைகளெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

4. நிலமையை முன்கூட்டியே கணிக்கப் பழகுங்கள். ஒரு வேலை என்றால் அதைக் கேட்டுச் செய்யும் மனநிலை உருவாக வேண்டும். எங்கேனும் பிரச்சினை வரலாம் என்றால் அதையும் ஊகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த “புரோ ஆக்டிவ்” தன்மை உங்களை வேலையில் மிக விரைவாய் வளர வைக்கும்.

5. தயங்காமல் பேசுங்கள். சில சிறு சிறு ஐடியாக்களை எடுத்து விடுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை வேண்டாம். பத்து வருஷமா இப்படியே தான் ஓடுது, அதையே ஓட்டுவோம் என நினைக்காதீர்கள். அதில் சிறு மாற்றம் செய்ய முடியுமா என பாருங்கள். இவை உங்கள் அதிகாரிகளின் கவனத்தைக் கவரும்.

6. உங்கள் மேலதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். அதை அவரிடமே பேசி சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை மேலதிகாரியிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லையேல் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை மேலதிகாரியோடு விவாதியுங்கள். சில மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறீர்களா என்பதை விசாரித்து அறியுங்கள்.

7. தவறுகள் செய்யாமல் இருக்கவே முடியாது. தவறு செய்யும்போது தவறை மறைக்காதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன்னியுங்கள். பின் அந்தத் தவற்றை ஒப்புக்கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அந்த தவறை மற்றவர்களும் செய்யாமல் இருக்க ஏதேனும் வழிமுறை செய்ய முடியுமா என பாசிடிவ் ஆக யோசியுங்கள்.

8. நீங்கள் செய்யும் வேலைகளுக்கான கிரடிட் உங்களுக்கு வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரியிடம் அடிக்கடி உரையாடுவது. அன்றைய பணிகள் குறித்த சுருக்கமான ஸ்டேட்டஸ் அனுப்புவது, இப்படி மேலதிகாரியுடன் எப்போதுமே தொடர்பில் இருங்கள்.

9. ஒரு சிக்கல் வந்ததும் சிணுங்கிக் கொண்டே மேலதிகாரியின் கதவைத் தட்டாதீர்கள். அது உங்கள் மேலான அபிமானத்தைக் குறைக்கும். ஒரு சிக்கல் வந்தால் அதை தீர்க்கும் வழிகளை யோசியுங்கள். உங்களால் தீர்க்க முடியாத சிக்கல் என்றால் மேலதிகாரியைப் பாருங்கள். அவரைப் பார்க்கும் போது, இது தான் சிக்கல். இதற்கு இப்படியெல்லாம் தீர்வு உண்டு. என தீர்வுகளுடன் பேசுங்கள். மேலதிகாரியின் மனதில் மேலான இடம் பிடித்து விடுவீர்கள்.

10. கல்லூரி காலமெல்லாம் முடிந்து விட்டது என்பதை வேலைக்குச் செல்லும் போது நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தூய்மையான, நேர்த்தியான ஆடை உங்களுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

11, அலுவலகத்தில் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுங்கள். மேலதிகாரி உங்களிடம் சொல்லும் விஷயத்தை டமாரம் அடிக்காதீர்கள். ஆரோக்கியமான அலுவல் சூழல் மன அழுத்தங்களுக்கெல்லாம் வடிகாலாகும்.

12. நேரம் – தரம் – விலை இந்த மூன்றும் எப்போதும் உங்கள் சிந்தனையில் இருக்க வேண்டும். செய்ய வேண்டிய வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாத தரத்தில் அதைச் செய்து முடிக்க வேண்டும், குறைந்த செலவில் அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த மூன்று வார்த்தைகளும் தான் பணியின் வெற்றியின் ரகசியம்

13. சக பணியாளரைப் பற்றி புறணி பேசுவதையெல்லாம் அடியோடு ஒதுக்குங்கள். உங்கள் பெயர் ஒரேயடியாகப் பாழாகிவிடும். எல்லோரையும் மதித்து, எல்லோரிடமும் நேர்மையாய் இருங்கள். சிலர் ஜால்ராவுக்காக பிறரைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்வார்கள். அவர்கள் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள். நேர்மையாய் இருந்தால் மேலதிகாரியின் மனதில் காலம் தாழ்த்தியானாலும் நிரந்தர இடம் நிச்சயம் உண்டு.

14. சம்பளம் மட்டுமே எல்லாம் என நினைக்காதீர்கள். அது ஒரு பாகம் மட்டுமே என நினையுங்கள். செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள். ஈடுபாட்டுடனும் ரசனையுடனும் வேலை செய்யும் போது நீங்கள் வாழ்க்கையை ரசிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் வேலை செய்யும் ஸ்டைலே உங்களை உயர்த்தும்.

15. புதிய வேலைகள் ஏதேனும் வந்தால் தயங்காமல் முதல் அடியை எடுத்து வையுங்கள். மற்றதெல்லாம் கூடவே வந்து விடும். முதல் சுவடு வைப்பது தான் மிகக் கடினமானது. அது தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தவும் செய்யும்.

16. உங்களால் முடியாத வேலை ஏதேனும் வந்தால், இதை என்னால் தனியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை என நேரடியாகவே சொல்லி விடலாம். முடியும் என்று சொன்னால் செய்ய வேண்டும் என்பதில் கவனமாய் இருங்கள்.

17. தினமும் காலையில் உங்கள் வேலையை வரிசைப்படுத்துங்கள். தலை போகும் அவசரம், அவசரம் தான் ஆனால் பரவாயில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தரம் பிரியுங்கள். அவசர வேலைகளில் முதல் கவனம் இருக்கட்டும்.

18. அலுவலக பொருட்களை வீட்டிற்கு எடுத்து வராதீர்கள். ஒரு பேனாவோ, சில பேப்பர்களோ, புத்தகங்களோ எடுத்து வருவது உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது போல. நேர்மையாய் இருங்கள். அது தான் மனிதனின் அடையாளம்.

19. உங்களுக்கென சில வேலை இலட்சியங்களைக் கொண்டிருங்கள். அதை அடைய வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியலிடுங்கள். உங்கள் வேலை காலத்தில் அந்த பட்டியல் எப்போதும் உங்கள் மனதில் இருக்கட்டும்.

20. கம்பெனி எனும் பெரிய அளவில் சிந்தியுங்கள். கம்பெனியின் லாபத்தை அதிகரிக்க, பிஸினஸை கூட்ட ஏதெனும் செய்ய முடியுமா என யோசியுங்கள். ‘இது என் வேலை இல்லை”, “இதான் நான் அப்பவே சொல்றேன்.. நீ தான் கேக்கலை”, “வேலை செம கடுப்படிக்குது..” என்பவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கானவை அல்ல. எனவே ஒதுக்குங்கள்.

உங்களுடைய புதுப் புது ஐடியாக்களைப் பின்னூட்டமாய்ப் போட்டால் மகிழ்வேன்

Jan 8, 2011

அல்-குர்ஆன் கூறும் நபிமார்கள்!

அல்-குர்ஆன் கூறும் நபிமார்கள்!

காலத்திற்கு காலம் மக்களை நல்வழிபடுத்த வல்ல நாயனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்களே நபிமார்களாவர். இந்த நபிமார்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சமுதாயத்தினருக்காகவும், குறிப்பிட்ட மொழியினருக்காகவும் ஏன் குறிப்பிட்ட சிலருக்காகவும் கூட அல்லாஹ் அவர்களை அனுப்பியிருக்கிறான். அதே நேரம் ஒட்டு மொத்த முழு மனித சமுதயத்திற்காகவும் அல்லாஹ்வால் அனுப்பட்டவர்களே எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள்.

இந்த அடிப்படையில் பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பியிருந்தாலும் அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டுமே அல்குர்ஆனில் இடம் பெயரச் செய்திருக்கிறான். இந்த நபிமார்களின் பெயர்களை நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியமான ஒன்றாகும்.

1. ஆதம் நபி (அலை)
2. இத்ரீஸ் நபி (அலை)
3. நூஹ் நபி (அலை)
4. ஹூத் நபி (அலை)
5. ஸாலிஹ் (அலை)
6. இப்ராஹீம் நபி (அலை)
7. லூத் நபி (அலை)
8. இஸ்மாயில் நபி (அலை)
9. இஸ்ஹாக் நபி (அலை)
10. யஃகூக் நபி (அலை)
11. யூஸூப் நபி (அலை)
12. ஷூஐப் நபி (அலை)
13. மூஸா நபி (அலை)
14. ஹாரூன் நபி (அலை)
15. தாவூத் நபி (அலை)
16. சுலைமான் நபி (அலை)
17. ஐயூப் நபி (அலை)
18. துல்கிப்ல் நபி (அலை)
19. இல்யாஸ் நபி (அலை)
20. அல்யஸஃ நபி (அலை)
21. யூனுஸ் நபி (அலை)
22. ஸக்கரிய்யா நபி (அலை)
23. யஹ்யா நபி (அலை)
24. ஈஸா நபி (அலை)
25. முஹம்மது நபி (ஸல்)
‘உலுல் அஸ்ம்’ எனப்படும் உறுதி பூண்ட நபிமார்கள் பின்வருமாறு: -
1. நூஹ் நபி (அலை)
2. இப்ராஹீம் நபி (அலை)
3. மூஸா நபி (அலை)
4. ஈஸா நபி (அலை)
5. முஹம்மது நபி (ஸல்)

ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) உபதேசிப்பார்கள்

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.
1. தளபதிக்கு அடிபணியுங்கள்.

2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.

3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.

4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.

5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.

6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள், வதைக்காதீர்கள்.

7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும்,
சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.

8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.

9. ‘பிஸ்மில்லாஹ்’கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும். அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.

Jan 7, 2011

இஸ்லாம்: பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்

இஸ்லாம்: பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்
0 comments 07:28 Posted by Alaipupani
Labels: இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.

பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.

1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: –
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று
பேசினால் பொய் பேசுவான்,
வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

2) பொய்யின் வகைகள்: -
அ) அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: -
இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.
ஆ) வியாபாரத்தில் பொய் கூறுவது: -
“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.
“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)
இ) கணவுகளில் பொய் கூறுவது: -
தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042
ஈ) கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: -
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உ) நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: -
யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.
அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: -
‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத், அஹ்மத்)
அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-
“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் மற்றும் திர்மிதி.
ஊ) குழந்தைகளிடம் பொய் சொல்வது: -
இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

“யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு
எ) மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

3) பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -
உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.
அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: -
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.
அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
ஆ) பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: -
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
இ) பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: -
இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -
(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களும்,குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும் ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், பத்வாக்களையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஒசையைக் கேட்டேன், என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிட மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிகமிக மோசமான ஒரு பொருள் எது வென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும். ஆதாரம்:(அலாம் அல்-முவக்கியீன் 1/95)
ஈ) பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
39:60 அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்¢ பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)
உ) பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
ஊ) பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: -
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
4) அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -
1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்
1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: -
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
யுத்தத்தின் போது
மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

Thanks : http://alaipupani.blogspot.com/

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!! - 2

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?
ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?
முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,
2. இரண்டாம் மாதம் ஸபர்,
3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,
4. நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,
5. ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,
6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,
7. ஏழாம் மாதம் ரஜப்,
8. எட்டாம் மாதம் ஷாஃபான்,
9. ஒன்பதாம் மாதம் ரமழான்,
10. பத்தாம் மாதம் ஷவ்வால்,
11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,
12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?
1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது?
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)

7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?
வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்

8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்

9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?
மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்

10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?
குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).

11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?
அப்துல்ஹமீது பாகவி

12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?
ஜனாஸா தொழுகை

13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?
எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.

14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?
'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)

15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?
'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)

16. உலகின் இறுதி நபி யார் ?
உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்

17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?
நபி முஸா (அலை)

19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?
நபி ஈஸா (அலை)

20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?
நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).

21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?
ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)

22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?
புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ

23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?
கலிபா உஸ்மான் (ரலி)

24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்

25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.

26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.

27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)

28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றிஈட்டிய நபித் தொழர் யார்?

காலித் பின் வலீத் (ரலி)

29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்

30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்

31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்

32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.

33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)

34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்

35. திருக்குர்ஆன் - இறைவேதம்

36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை

37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா

38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்

39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்

40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்

41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்

42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.

43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை

44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை

45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்

46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு

48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை

49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது

50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்

51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு

52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.

53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்

54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது

55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு
1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)


தீய குணங்கள்


1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி –

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)நற் குணங்கள்

1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)
11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்
1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

3. எதையும் பாராட்டும் போது?

மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?

நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.

6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?

ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ?

தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.

8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ?

யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.

9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ?

யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.

10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?

அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?

வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?

லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?

ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?

தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.

15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?

ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

16. நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும் ?

நஊதுபில்லாஹ் - அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.

17. திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறுவாய் ?

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.

18. தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படுபவை ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.

19. ஆடை அணிகிற போது (கூறப் படும்) துஆ?

அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.

20. புத்தாடை அணியும் போது (கூறப்படும்) துஆ ?

அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி

வகைரி மாஸூனிஅ லஹூ வ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனி அலஹூ.

பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.

21. தன்னுடைய ஆடையை அவர் கலையும் போது அவர் கூறவேண்டியது?

பிஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்...

22. கழிவறையில் நுழைகின்ற போது துஆ?

(பிஸ்மில்லாஹி) அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக மினல் குபதி வல் கபாயிதி
பொருள் : (அல்லாஹ்வின் பெயரால) பிரவேசிக்கறேன் யாஅல்லாஹ் ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி(ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

23. வுளுச் செய்யுமுன் கூறப்பட வேண்டியது?

பிஸ்மில்லாஹி

24. வுளுவை முடித்துக் கொண்ட பின் கூறப்பட வேண்டியது?

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ

பொருள் : வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் எனசாட்சி கூறுகிறென்.

25. வீட்டிலிருந்து புறப்படும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

26. வீட்டினுள் நுழையும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

27. பாங்கின் போது கூறப்படுபவை?

ஹய்ய அலஸ்ஸலாதி மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹி என்பது நீங்கலாக பாங்கு

கூறுபவர் போன்றே (செவியேற்பவரான) அவர் கூறுவார். (இவ்விரு வார்த்தைகளை செவியேற்கின்றபோது) லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று அவர் கூறுவார்.

28. காலை மற்றும் மாலையில் கூறப்படுபவை?

அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஸூ.

பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.

29. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு துஆ?

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு - அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.

30. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) துஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.

31. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?

லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.

பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.

32. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ வ அஊது பிக மின்ஷர்ரிஹா.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.

33. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?

ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.

பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.

34. நோன்பு திறந்தபின் ...

தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உருக்கு, வதபத்தல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்.

பொருள் : தாகம் தனிந்தது, நரம்புகளும் நனைந்து விட்டன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைக்கும்.

35. உணவுக்கு முன்னர் துஆ?

உங்களில் ஒருவர் உணவு உண்டால் (1) பிஸ்மில்லாஹ் என்று கூறவும் அதன் ஆரம்பத்தில் கூற அவர் மறந்து விட்டால் (2)பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என அவர் கூறவும்.

பொருள் : (1) அல்லாஞ்வின் பெயரால் (உண்கிறேன்). (2) அதன் தொடக்கம் அதன் முடிவு ஆகியவற்றில் பிஸ்மில்லாஹ்.

36. உணவை உண்டு முடித்தபின் துஆ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஜகனீஹி, மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வத்தின்.

பொருள்: என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என்பலமின்றி எனக்கு இதை உண்ணக் கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.

37. உணவளித் தவருக்காக விருந்தாளியின் துஆ

அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.

பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,

38. நோன்பாளர் - அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?

இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.

பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.

39. கோபம் நீங்கதுஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

40. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு,

வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.

41. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?

வ ஃபீக பாரகல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.

42. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?

நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

44. திடுக்கத்தின் போது கூறப்படுவது?

லாயிலாஹ இல்லல்லாஹூ

பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.

45. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?

சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.

பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்.