அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்............................ அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ் இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )
Dec 23, 2014
கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.
கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.
காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!! www.puradsifm.com
5 Marriage Lessons that Mothers Should Give to their Sons
1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே
கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா...
4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...
5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்....!!!!
உங்கள் கருத்துக்களும் தெரிவிக்கலாம்...!
எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். www.puradsifm.com
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்
ஆரோக்கியமாக வாழ்வோம்
Dec 17, 2014
இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் .
கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.
நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.
தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.
வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.
சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.
வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.
எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.
பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.
பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.
நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.
இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
சுடுதண்ணீர் நன்மைகள் ;-
சுடுதண்ணீர் நன்மைகள் ;-
1.உடல் அசதியாக இருந்தால் நல்ல உடல் பொருக்கும் அளவிற்கு நீரை சுட வைத்து குளித்தால் உடல்வலி கேட்கும்
2.பிறந்த குழந்தைகளை தினமும் இரவு தூங்கவைக்கும் முன் சுடுநீரில் குளிக்க வைத்து கைகால் பிடித்துவிட்டால் நிம்மதியாக தூங்குவர்
3.முகத்தில் எண்ணெய் பசை இருந்தாலோ அல்லது முகத்தில் அரிப்பு இருந்தாலோ சுடுநீரில் முகம் கழுவினால் எண்ணெய் பசபசப்பு அகலும் அரிப்பும் நீங்கும் .
4.சுடுநீரில் கைகால்கள் கழுவிவர தோல் மென்மையாகும் ,தோலில் மேல் தினமும் படியும் இறந்த செல்களில் கழிவுகள் நீங்கும்
5. வாரம் ஒருமுறை நீராவி பிடித்தால் முகம் பொலிவு பெறும் ,தலையில் கோர்த்திருக்கும் கெட்ட நீரும் இளகி சுவாசக்குழாய் வழியே வெளியேறும்
6. சளித்தொல்லையில் தொண்டை கரகரப்பு உண்டானால் சுடுநீர் குடித்தால் கமறல் மற்றும் இருமல் தீரும்
7.மேல் காய்ச்சல் அல்லது சளித்தொல்லை காலங்களில் வாயில் அதிகப்படியான எச்சில் சுரந்து கொழகொழ தன்மையாகவே இருக்கும் அந்த சமயங்களில் நல்ல சூடான நீரை குடித்தால் அந்த தன்மை நீங்கும்
8. வாந்தி எடுத்துவிட்டபின் வயிறு ஒருவித எரிச்சல் காரணமாக இறைந்து கொண்டிருக்கும் அந்த நேரம் சுடுநீர் குடிக்க இறைச்சல் அடங்கும்
9.உண்ட உணவு ஜீரணமாகாமல் நெஞ்சில் நின்று எரிந்துகொண்டிருந்தாலோ புளித்த ஏப்பம் வந்தாலோ உடனடியாக சுடுநீர் குடிக்க விரைவான ஜீரணம் கிடைக்கும்
10. மலக்கட்டு உள்ளவர்கள் சுடுநீரை அப்படியே குடித்தாலும் அல்லது சுடுநீரில் சிறிதளவு புளியை கரைத்துவிட்டு குடித்தாலும் மலக்கட்டு நீங்கும்
11. அன்றாடம் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் சுடுநீர் குடித்த பிறகு உணவு உட்கொண்டால் அதிக அளவு உணவு உண்பதை தவிர்க்கலாம்
12. ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னும் சுடுநீர் குடிப்பது ஜீரணத்திற்கு நல்லது
13. உடலில் உள்ள அதிக கொழுப்பை கறைத்து உடல் மெலிய வைக்கும் தன்மை சுடுநீருக்கு உண்டு ,உடல் எடை குறைக்க விரும்புவோர் காலை எழுந்து வெற்று வயிற்றில் சுடுதண்ணீர் குடித்தாலே உடல் பருமன் குறையும்
14.சுடுநீர் குடிப்பதால் உடல் இளகு பெரும் உடல் இறுக்கம் தளர்ந்து நல்ல வளையும்தன்மை கிடைக்கும். (flexibility )
15.தினமும் ஒவ்வொரு வேளையும் சுடுதண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள வியர்வை தானாக வெளியேறும் ,வியர்வை வெளியேறினாலே பாதி நோய் நம்மை அண்டாது
ஆகவே சிலர் கூறுவார்கள் வெந்நீரை குடித்தால் தாகம் தீராது என்று - ஆனால் உண்மையில் ஒரு பாட்டில் ஐஸ்தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம் ஒரு டம்ளர் வெந்நீரில் தீரும் ,சிறு வயதிலுருந்து வெந்நீர் குடிக்க பழகுவோருக்கு உடல் உபாதைகள் எதுவும் உண்டாகாது அவர்களின் நோய் தடுப்பு சக்தி அதிகப்படியாய் இருக்கும்
உடல் உறுப்புகள் மற்றும் தோலின் மேன்மை வெந்நீரில் உள்ளது!
Dec 16, 2014
சமையல் எரிவாயு மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். (www.ayyampetai.webs.com)
இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் (www.ayyampetai.webs.com)
செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
Dec 14, 2014
நெகிழவைக்கும் பாணந்துறை மெளலவியின் ஈமானிய உணர்வு
மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம்: அதிர்ச்சி ரிப்போட்
Print Friendly and PDF
முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்க பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற தோரணையில் நமக்குள்ளேயே மோதிக்கொள்கிறோம். இதனால் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக சிதறுண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இந்தியாவில் இஸ்லாத்தை தெரியாத ஒரு முஸ்லிம் கிராமம் மதம் மாறுவதற்கு தயாரான செய்தி உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவிலுள்ள பல்வேறு குக்கிரமாங்களில் பள்ளிவாசல்கள் இல்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி முழுமைாகத் தெரிவதில்லை. இந்தியாவில் ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின்படி பெரும்பாலான கிராமங்களில் பள்ளிவாசல்களே கிடையாது. இஸ்லாம் என்றால் என்வென்று கூட தெரியாமல் அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்.
தமிழகத்தின் பல கிராமங்களில் குடிசைகளிலேயே பள்ளிவாசல்கள் இயங்கிவருகின்றன. இங்கு இஸ்லாத்தைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லை. இவ்வாறனதொரு இடம்தான் திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் இருங்கலூர் உள்ளூராட்சிக்கு உட்பட்ட சோழமொழி கிராமம். இங்கு 35 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாது. மார்க்க கடமைகள் பற்றி தெரியாது. தொழுகை, நோன்பு பற்றியெல்லாம் தெரியாது. அதை அவர்கள் செய்து பார்த்திருக்கவும் மாட்டார்கள். பெயரவில் முஸ்லிம்களாக இருந்த இம்மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கவில்லை.
சோழமொழி கிராம மக்கள் அனைவரும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் கூலித் தொழில் செய்து தங்களது வயிற்றைக் கழுவி வந்தனர். அருகிலுள்ள கிறிஸ்தவ தோட்டமொன்றில் வேலைபார்த்தனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கிறிஸ்தவர்கள், எங்கள் மதத்துக்கு வந்துவிட்டால் இலவச வீடு உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து தருவதாகக் கூறி ஆசைகாட்டியுள்ளனர். மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்ந்துவரும் இவர்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்குமென்ற நப்பாசையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறத் தயாராகிவிட்டனர்.
இவர்கள் மதம் மாறப்போகும் செய்தியைக் கேள்வியுற்ற ஐக்கிய நலக் கூட்டமைப்பு (United Welfare Organization - UNWO) சோழமொழி கிராமத்துக்குச் சென்று, குறித்த முஸ்லிம் மக்களிடம் சென்று அவர்கள் மதம் மாறுவதற்கான காரணங்களை கேட்டனர். அங்குதான் ஆச்சிரியம் காத்திருந்தது. இஸ்லாத்திலிருந்து செல்வது பற்றி அவர்களுக்கு எவ்விதமான அறிவும் இல்லை. யார் உதவி செய்தாலும், அந்த மதத்துக்கு மாறும் அளவுக்கு அவர்களது மனநிலை இருந்தது. இஸ்லாத்திலிருந்து பிரிந்து செல்வதை அவர்கள் பாவமாக நினைக்கவில்லை. அங்கு பள்ளிவாசலோ, தொழுகையோ இருக்கவில்லை. இஸ்லாம் பற்றி அறிவின்மையால், அவர்கள் மதம் மாறுவதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
உடனே விரைந்து செயற்பட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு அங்கு குடிசை ஒன்றில் பள்ளிவாசலை நிறுவியது. பிலால் ஜும்ஆ மஸ்ஜித் என்ற பெயரில் நிறுவப்பட்ட அப்பள்ளிவாசலில் ஐநேரத் தொழுகைகள், வாரம் இருமுறை மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் தப்லீக் ஜமாஅத் கஸ்துகள் என்பன நடைபெற்றன. இப்பள்ளிக்கு இமாமாக இருப்பவர் பாணந்துறையைச் சேர்ந்த அல்ஹாபிஸ் மெளலவி அப்துல் கரீம் (ரஹீமி) என்பவர். இவர் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம்பெற்றவர். ஒருநாள் சமயபுரம் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த இவர், சோழமொழி மக்கள் இஸ்லாத்திலிருந்து மதம்மாறுவதைக் கேள்வியுற்று அவராகவே முன்வந்து பிலால் ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாக பொறுப்பேற்றார்.
இவரது வருகையினால், சோழமொழி கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் ஐநேரமும் தொழுபவர்களாகவும், குர்ஆன் ஓதுபவர்களாகவும் மாறினர். இதுவே அவரது ஒரேயொரு குறிக்கோளாகும். அத்துடன் சோழமொழி கிராமத்தில் பள்ளிவாசல் கட்டவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். இப்பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றிவரும் அப்துல் கரீம் மெளலவிக்கு 300 இந்திய ரூபா மாத்திரமே சம்பளமாக வழங்கப்பட்டது.
இக்காலத்தில் இந்தியாவில் பணியாற்றும் பள்ளிவாசல் இமாம் ஒருவருக்கு குறைந்தது 10 ஆயிரம் இந்திய ரூபாவும் தங்குவதற்கான வீடு மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படும். ஆனால், சோழிமொழி கிராமத்தின் இமாமான இலங்கையைச் சேர்ந்த மெளலவி அப்துல் கரீம் வெறும் 300 ரூபாவுக்கு பணியாற்றி வந்தார். பணத்தையும் மீறி அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இன்றுவரை அதற்காக போராடி வருகிறார். இவரது சம்பளத்தைக் கேள்வியுள்ள ஐக்கிய நலக் கூட்டமைப்பு மாதாந்தம் இராண்டாயிரம் இந்திய ரூபாவை இவருக்கு வழங்கி வருகிறது.
பாணந்துறையில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இவர், மக்களை ஜாஹிலியக் காலத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக தனது வருமானத்தைப்பற்றி கவலைப்படாமல் துறவறம் பூண்டுள்ளார். இங்கு மாடிவீட்டில் வாழ்ந்தவர் தற்போது சோழமொழிக் கிராமத்தில் சிறிய ஓலைக் குடிசையில் இருக்கிறார். இவர் நினைத்திருந்தால் இலங்கையில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், இறைவனின் திருப்பொருத்ததுக்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளார். அத்துடன் திருமணம் செய்து அக்கிராமத்திலேயே வாழ்வதற்கும் உறுதிபூண்டுள்ளார்.
போதிய வருமானம் இல்லாமையினால் ஏனைய நேரங்களில் உணவகங்களில் வேலை செய்கிறார். அங்கேயே மூன்று வேளைக்கான உணவையும் உட்கொள்கிறார். இங்கு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் மெளலவிகளுக்கு மத்தியில் ஒரு இலங்கை இளைஞரின் தியாகத்தை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும், தனது ஆத்ம திருப்திக்காகன இவரது பணி தொடரவேண்டும்.
சோழமொழி கிராமத்தின் நிலைமைகளை வெளியுலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் ஓர் ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்தனர். திருச்சி செய்தியாளர் சாஹுல் ஹமீது தலைமையிலான ஒரு குழு இதற்கென நியமிக்கப்பட்டது. ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள், கேரளா குமுளியைச் சேர்ந்த முஹம்மது ஜாவித், சாஹுல் ஹமீட், அன்ஸார் அலி, சுதர்சன் மற்றும் திருச்சி ஐக்கிய நலக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களான பீர் முஹம்மது, ஷனாவாஸ் ஆகியோர் சோழமொழி கிரமாத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து அவற்றை ஆவணப்படமாகத் தயாரித்தனர்.
இந்த ஆவணப்படம் சென்னை தலைமை அலுவலகமாக ஐக்கிய நலக் கூட்டமைப்பின் பொது முகாமையாளர் பாருக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அங்கு பார்வையிட்ட 150க்கும் மேற்பட்டோர் கண்கலங்கிவிட்டனர். உடனடியாக அங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு அல்ஹரைமன் நிதியம் பொறுப்பேற்றுக் கொண்டது. தற்போது அந்த பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அல்ஹரைமன் அமைப்பு பள்ளிவாசலை மட்டுமே கட்டிக் கொடுத்தது. பள்ளிவாசலைச் சுற்றி மதில், வுழூ செய்வதற்கான இடம், மலசலகூட வசதிகள் மற்றும் இமாம் தங்குவதற்கான வசதிகள் போன்ற செய்து கொடுக்கப்படவில்லை. இதனை சோழமொழி மக்களே செய்யவேண்டுமென குறித்த அமைப்பு கூறியுள்ளது. இதற்கான மொத்த செலவு 6 இலட்சம் இந்திய ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சோழமொழி கிராமத்திலுள்ள மக்கள் ரமழான் காலங்களில் நோன்பு பிடிப்பது கூட தெரியாமல் இருந்தார்கள். அங்குள்ள இமாம் அப்துல் கரீம், ஏன் நோன்பு பிடிக்கவேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட பல விடயங்களை எடுத்துக்கூறிய பின்பே, அங்குள்ள மக்களுக்கு நோன்பைப் பற்றி தெரிந்தது. அதன்பின்னரே அவர்கள் நோன்பு நோற்றார்கள். தங்களது வறுமை காரணமாக அவர்கள் வெறும் தண்ணீரினால் நோன்பு திறந்தார்கள். இதனை அவதானித்த இமாம், நோன்பாளிகளுக்கு கஞ்சி வழங்கும் நோக்கில் ஆவணப்படம் தயாரித்த குழுவினரை நேரில் சந்தித்து பேசினார்.
விடயங்களை கேட்டறிந்த குழுவினர், நோன்பு காலங்களில் இப்தார் செய்வதற்காக கஞ்சி மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அங்குள்ள 35 குடும்பங்களுக்கும் நோன்புப் பெருநாள் தினத்துக்காக சாரம் மற்றும் பணமும் வழங்கப்பட்டன. ஹஜ் பெருநாள் தினத்தன்று 35 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு 6 பேர் வீதம் பிரியாணி சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப்பட்டன. இவ்வேளையிலேயே பள்ளிவாசலின் ஏனைய புனரமைப்பு வேலைகளை பூர்த்திசெய்து தருமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கென செய்தியாளர் சாஹுல் ஹமீது தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் ஹமீது முஹம்மது றிஸ்வான், அஜீஸுல்லா, மைதீன், முஹம்மது முஸ்தாக், ஆதில், முத்துப்பேட்டை முஹம்மது அனிபா, ஜியாவுல் ஹக் ஆகியோர் உள்ளிடங்குகின்றனர். இவர்கள் மூலமாகவே இந்தப் பள்ளிவாசலின் ஏனைய பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலமையை அறிந்தவுடன் நல்லுள்ளம் படைத்த ஒருசிலர் பொருளாகவும், பணமாகவும் உதவி செய்தனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலுள்ள கைக்கூலி கைவிட்டோர் கழகம், இளம் அரிமா சங்கம் (லியோ கிளப்), ரோட்ராக்ட் கிளப் ஆகிய அமைப்பிலுள்ள மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு பள்ளிவாசலுக்குச் சென்று இந்தப் பள்ளியின் கட்டிட நிதிக்காக வசூல் செய்துவருகின்றார்கள். ஆனால், இப்பணி இன்னும் நிறைவடையவில்லை.
இலங்கையில் ஒவ்வொரு வீதிக்கும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சில ஊர்களில் பள்ளிவாசல்கள் இல்லாமையினால் இஸ்லாத்தைப் பற்றி தெரியாமலேயே மக்கள் மரணித்துப் போகிறார்கள். இதற்கு பதில் சொல்லவேண்டி கடமைப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. வெளிநாடு என்றாலும், இஸ்லாத்தைப் பற்றித் தெரியாமல் இருந்த ஜாஹிலியா காலத்து மக்கள் போன்றதொரு சமூகம் வாழ்வதைப் பார்த்துக்கொண்டு எம்மால் சும்மா இருக்கமுடியாது.
இறைவனின் திருப்பொருத்துக்காக அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் களமிறங்கியுள்ள பாணந்துறை சகோதரரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு தம்மாலான முழு உதவிகளையும் செய்வோம். அவருடன் கைகோர்த்து நாமும் அந்த மக்களுக்கு உதவுவோம். பள்ளிவாசலின் ஏனைய பணிகளைச் செய்வதற்கு தம்மாலான உதவிகளை தாரளமாக வழங்குவோம்.
இதற்கு உதவிசெய்வதன் மூலம் இஸ்லாத்திலிருந்து பிரிந்துசெல்ல முற்பட்ட ஒரு சமூகத்துக்கு நல்வழி காட்டிய நன்மை நமக்கு வந்து சேரும். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கு பள்ளிவாசல் புனரமைப்புக் குழுவின் தலைவர் சாஹுல் ஹமீது (+919865124804) மற்றும் பாணந்துறை மெளலவி அப்துல் கரீம் (+919688698828) ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியும்.
(திருச்சியிலிருந்து சாஹுல் ஹமீது)
- See more at: http://www.thuruvamnews.com/2014/12/1_14.html#sthash.FAMLuRCh.dpuf
Dec 5, 2014
நோய்களை தீர்க்கும் கீரைகள்.....
காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:
ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.
ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாச்சிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.
இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகணிக்கீரை, கரிசலாங்கணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.
முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லைரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.
இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்....
குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்! - ஒரு பார்வை
குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்! - ஒரு பார்வை
ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், ‘நான் ‘டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம். சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று அறிவோம் .
‘குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் ‘ஜங்க்’ புட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.”
குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.
குளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. ‘டயட்’ குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
எனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். நீராகாரம், நீர் மோர் என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, அதன் முழுப் பலனும் கிடைக்கும்.
குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள் :
உடல் பருமன்
அமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.
சர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில் படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
இதயம் மற்றும் சர்க்கரை நோய்
குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.
அதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
பற்கள் / எலும்புகள்
குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லில் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கும்.
சிறுநீரகம்
தினமும் குளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்!குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.
பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது
நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின்
ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?
பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற
செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும்
சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம்
திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை
கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.
மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு
இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும்
பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை தங்களது வாழ்க்கையில் கட்டலாம்
என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர்.
ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள்
ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.
வானமும், பூமியும் கைவிட்ட உலகம். நதிகளும், வயல் வரப்புகளும்,
மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து
வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு. இதனை விட சொந்த ஊரையும்,
குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது பாதுகாப்புக் குறித்த
கவலை.
ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே
நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.
மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக
மாறுகிறது. காற்று, நீர், உணவு இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி
கொடிகளைப் போலவே அவர்களது மனமும் வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை
எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும் உண்டு.
கவலைகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவர்கள் தங்களது சொந்த
ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான
வாழ்க்கை முறை வளைகுடா வாழ் இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு
பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.
சிண்ட்ரோம் எக்ஸ்
வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம்
சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.
நீரழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், உடல் பருமன்
ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ். இவையெல்லாம் வாழ்க்கை முறை
மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில் வளைகுடா வாசிகள் இந்த
நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.
வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில்
இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.
வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் உடலின்
செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான் நோய்களும் ஒவ்வொன்றாக
குடிக்கொள்கிறது.
சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை.
இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு
வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா வாசிகள்.
வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்
மனச்சோர்வு(depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்
நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும் இந்தியர்களை முதலில் பாதிப்பது
நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த கடுமையான கவலை, புதிய இட
சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி இடங்களில் சந்திக்கும்
பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி, தனிமை ஆகியன
மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.
ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம், உடற்பயிற்சி, நட்புறவுகள்
இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர் இழக்கவேண்டிய நிலைமை
உருவாகிறது.
மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர் நிம்மதியை தேடுவதாக கூறி புகை,
மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போகின்றனர்.
உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் மன
நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.
மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால்
உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.
வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட சதவீதம் பேர்
மனச்சோர்வால்(depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள்
கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மனச்சோர்வுக்கு உரிய
சிகிட்சையை பெற முயலுவதில்லை.
மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும்,
ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக
மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலும் இதன் இறுதி முடிவு
தற்கொலையில் சென்று முடிவடைகிறது.
வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்
என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன
சுட்டிக்காட்டப்படுகின்றன:
1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில்
சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.
சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள்
ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல் உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம்
தேடுகின்றார்கள். மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து முன்னரே
அறிந்திருந்தால், அவற்றை கையாளும் பக்குவமும், பொறுமையும் இருந்தால்
எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். தற்கொலை
எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு வேண்டும். இத்தகைய
நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது
சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில் புரிந்து
கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.
உணவு பழக்க வழக்கம்
சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.
இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம் வளைகுடாவாசிகளில்
பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே கிடைக்காமலா
உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை நறுக்கி,
தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில் சாதம்
தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே
பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது
சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது
சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும்
உண்டு. இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில்
கொலஸ்ட்ரோல் சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.
வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர் முகத்தில் தெரிந்தாலே
புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை. அதிக வருமானம் உடையோர்
மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை நீட்டி அழைக்கும்
என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின் கொழுப்பை குறைக்க
நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. இவ்வாறு
பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.
சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால் மூல நோயால் அவதியுறுவோரும்
உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப அருந்தாதும் இப்பிரச்சனையை
உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும், தாகத்தையும் தாங்கமுடியாமல்
கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக கல்லும், மஞ்சள் காமாலை
நோயும் உருவாக காரணமாகிறது.
உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது
10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும் சூழல் ஏற்படும் இவர்களுக்கு
குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. ஸ்நாக்சும்,
ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை அடக்குவோரும் உண்டு. ஏதேனும்
ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு
கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு
காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்போர் காசை மிச்சம்
பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு தாமதமாக உணவை உண்டு, காலையில்
தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால் காலை உணவை தவிர்க்கலாம் என்ற
கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை
சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம்.
நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில்
வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான்.
இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை
கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில்
உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேசன் போல்
கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட
வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக
மாறிவிடும்.நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)போன்ற வாழ்க் கை முறையினால்
உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.
ஓய்வில்லாத பணி!
பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம்
ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம்
எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு
என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள்
உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப்
பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன்
உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று
சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை
சொந்தமாக்கலாம்.
ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக்
குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால்
பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும்,
புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய்
ஏற்படுகிறது.
கடுமையான வெப்பம்
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான
வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ்
டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது
சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால்
வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும்
சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம்
இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து
விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம்
ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள்
பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை
காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.
பெனடால் என்ற உற்றத்தோழன்
வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல்
மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா?
ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.
வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால்
உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால்
பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று
காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா
நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும்
சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள்
எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன்
எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.
பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின்
பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக
உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல்
உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல்
மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள்
புரிந்துகொள்வார்கள்.
தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள்
வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச்
சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில்
பிடியில் சிக்கவைக்கிறது.
இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’
என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.
உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த
பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள்
மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து
நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.
இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ்
இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை
அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா
வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை
தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!
சிந்தனை நேரம்
சிந்தனை நேரம்
1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.

குழந்தைக் கல்வி
குழந்தைக் கல்வி
குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை, நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்சனை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும்.
பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள்.
பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
பெண் குழந்தைகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ! - ஒரு சிறப்பு பார்வை!
நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.
1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.
2.உங்கள் மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
5. வாழ்க்கையைப் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.
6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.
7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.
8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
9. நம் குடும்பத்தைப் பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும் .
10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
11. ஹதிஸ்கள் , ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களின் வரலாறு புத்தகம், நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.
14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் !
மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக துவா செய்யுங்கள்.......
கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!! - 2
கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!
1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?
வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.
2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?
ஹபஸா (அபிசீனியா)
3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?
முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.
4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?
1. முதல் மாதம் முஹர்ரம்,
2. இரண்டாம் மாதம் ஸபர்,
3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,
4. நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,
5. ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,
6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,
7. ஏழாம் மாதம் ரஜப்,
8. எட்டாம் மாதம் ஷாஃபான்,
9. ஒன்பதாம் மாதம் ரமழான்,
10. பத்தாம் மாதம் ஷவ்வால்,
11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,
12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.
5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?
1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.
6. உம்முல் குர்ஆன் எது?
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)
7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?
வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்
8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்
9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?
மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்
10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?
குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).
11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?
அப்துல்ஹமீது பாகவி
12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?
ஜனாஸா தொழுகை
13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?
எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.
14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?
'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)
15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?
'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)
16. உலகின் இறுதி நபி யார் ?
உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்
17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?
நபி முஸா (அலை)
19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?
நபி ஈஸா (அலை)
20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?
நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).
21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?
ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)
22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?
புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ
23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?
கலிபா உஸ்மான் (ரலி)
24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?
அபு பக்கர் (ரலி) அவர்கள்
25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?
அலி (ரலி) அவர்கள்.
26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?
அன்னை சுமையா (ரலி) அவர்கள்.
27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?
காலித் பின் வலீத்(ரலி)
28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?
காலித் பின் வலீத் (ரலி)
29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?
மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்
30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?
லவ்ஹூல் மஹ்ஃபுள்
31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?
கிராமன் - காத்திபீன்
32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?
10 மடங்கு நன்மை உண்டு.
33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?
உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)
34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்
35. திருக்குர்ஆன் - இறைவேதம்
36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?
ஹிரா குகை
37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?
மக்காவிலுள்ள கஃபா
38. கலிபா என்பவர் யார்?
இஸ்லாமிய ஆட்சியாளர்
39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?
நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்
40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?
புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்
41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?
தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்
42. சுன்னா என்றால் என்ன?
நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.
43. ஸலாத் என்றால் என்ன?
தொழுகை
44. ஸஜ்தா என்றால் என்ன?
தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை
45. சூரா என்றால் என்ன?
குர்ஆனின் பாகம்
46. ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
47. ஸவ்ம் என்றால் என்ன?
நோன்பு
48. வித்ர் என்றால் என்ன?
இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை
49. வுளு என்றால் என்ன?
தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது
50. தக்வா என்றால் என்ன?
இறையச்சம்
51. தவ்பா என்றால் என்ன?
பாவ மன்னிப்பு
52. புர்கான் என்றால் என்ன?
திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.
53. தீன் என்றால் என்ன?
அல்லாஹ்வின் மார்க்கம்
54. தூஆ என்றால் என்ன?
இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது
55. பாங்கு என்றால் என்ன?
தொழுகைக்கான அழைப்பு
1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.
(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)
சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)
2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4
3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?
தந்தையின் திருப்தி :
இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.
(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.
தாய்க்கு நன்மை செய்வது :
இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,
மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)
4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?
ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)
பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக
5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?
ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)
தீய குணங்கள்
1 . தற்பெருமை
(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)
2 . கொடுமை
அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)
3 . கோபம்
(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)
4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்
உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).
5. பொய்
எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)
6. கெட்டவற்றை பேசுதல்
எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)
7. இரட்டை வேடம் போடுதல்
மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)
8. பாரபட்சம் காட்டுதல்
நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)
முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)
9. வரம்பை மீறிய புகழ்ச்சி –
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)
11. வாக்குறுதி மீறல்
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)
நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)
12. சண்டை
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)
13. குறை கூறல்
குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)
இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)
14. பொறாமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)
15. கெட்ட பார்வை
(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)
கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)
செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)
நற் குணங்கள்
1. நிதானம்
இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)
உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)
2. எளிமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)
3. தூய்மை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)
(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)
4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்
மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)
5. நாவடக்கம்
இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)
எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)
6. அன்பாக பேசுதல்
கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)
7. பிறருக்கு உதவி புரிதல்
நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)
8. உண்மை பேசுதல்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)
விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)
9. நன்றி செலுத்துதல்
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)
10. வெட்கப்படுதல்
திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)
11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)
அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)
12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)
எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி
13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்
நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)
தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்
1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?
எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.
2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?
நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.
3. எதையும் பாராட்டும் போது?
மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.
4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?
சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.
5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?
நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.
6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?
ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.
7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ?
தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.
8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ?
யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.
9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ?
யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.
10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?
அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.
11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?
வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.
12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?
லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.
13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?
ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.
14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?
தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.
15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?
ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.
16. நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும் ?
நஊதுபில்லாஹ் - அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.
17. திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறுவாய் ?
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.
18. தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படுபவை ?
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.
பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.
19. ஆடை அணிகிற போது (கூறப் படும்) துஆ?
அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.
பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.
20. புத்தாடை அணியும் போது (கூறப்படும்) துஆ ?
அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி
வகைரி மாஸூனிஅ லஹூ வ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனி அலஹூ.
பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.
21. தன்னுடைய ஆடையை அவர் கலையும் போது அவர் கூறவேண்டியது?
பிஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால்...
22. கழிவறையில் நுழைகின்ற போது துஆ?
(பிஸ்மில்லாஹி) அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக மினல் குபதி வல் கபாயிதி
பொருள் : (அல்லாஹ்வின் பெயரால) பிரவேசிக்கறேன் யாஅல்லாஹ் ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி(ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
23. வுளுச் செய்யுமுன் கூறப்பட வேண்டியது?
பிஸ்மில்லாஹி
24. வுளுவை முடித்துக் கொண்ட பின் கூறப்பட வேண்டியது?
அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ
பொருள் : வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் எனசாட்சி கூறுகிறென்.
25. வீட்டிலிருந்து புறப்படும்போது நாம் என்ன கூறவேண்டும்?
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.
26. வீட்டினுள் நுழையும்போது நாம் என்ன கூறவேண்டும்?
பிஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
27. பாங்கின் போது கூறப்படுபவை?
ஹய்ய அலஸ்ஸலாதி மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹி என்பது நீங்கலாக பாங்கு
கூறுபவர் போன்றே (செவியேற்பவரான) அவர் கூறுவார். (இவ்விரு வார்த்தைகளை செவியேற்கின்றபோது) லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று அவர் கூறுவார்.
28. காலை மற்றும் மாலையில் கூறப்படுபவை?
அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஸூ.
பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.
29. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு துஆ?
அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.
பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு - அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.
30. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) துஆ?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.
31. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?
லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.
பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.
32. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?
அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ வ அஊது பிக மின்ஷர்ரிஹா.
பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.
33. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?
ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.
பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.
34. நோன்பு திறந்தபின் ...
தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உருக்கு, வதபத்தல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்.
பொருள் : தாகம் தனிந்தது, நரம்புகளும் நனைந்து விட்டன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைக்கும்.
35. உணவுக்கு முன்னர் துஆ?
உங்களில் ஒருவர் உணவு உண்டால் (1) பிஸ்மில்லாஹ் என்று கூறவும் அதன் ஆரம்பத்தில் கூற அவர் மறந்து விட்டால் (2)பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என அவர் கூறவும்.
பொருள் : (1) அல்லாஞ்வின் பெயரால் (உண்கிறேன்). (2) அதன் தொடக்கம் அதன் முடிவு ஆகியவற்றில் பிஸ்மில்லாஹ்.
36. உணவை உண்டு முடித்தபின் துஆ?
அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஜகனீஹி, மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வத்தின்.
பொருள்: என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என்பலமின்றி எனக்கு இதை உண்ணக் கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.
37. உணவளித் தவருக்காக விருந்தாளியின் துஆ
அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.
பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,
38. நோன்பாளர் - அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?
இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.
பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.
39. கோபம் நீங்கதுஆ?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.
40. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?
அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு,
வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.
பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.
41. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?
வ ஃபீக பாரகல்லாஹ்.
பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.
42. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?
நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
44. திடுக்கத்தின் போது கூறப்படுவது?
லாயிலாஹ இல்லல்லாஹூ
பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.
45. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?
சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.
பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்.

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். www.facebook.com/puradsifm
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)