இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Dec 17, 2014

சுடுதண்ணீர் நன்மைகள் ;-

சுடுதண்ணீர் நன்மைகள் ;- 1.உடல் அசதியாக இருந்தால் நல்ல உடல் பொருக்கும் அளவிற்கு நீரை சுட வைத்து குளித்தால் உடல்வலி கேட்கும் 2.பிறந்த குழந்தைகளை தினமும் இரவு தூங்கவைக்கும் முன் சுடுநீரில் குளிக்க வைத்து கைகால் பிடித்துவிட்டால் நிம்மதியாக தூங்குவர் 3.முகத்தில் எண்ணெய் பசை இருந்தாலோ அல்லது முகத்தில் அரிப்பு இருந்தாலோ சுடுநீரில் முகம் கழுவினால் எண்ணெய் பசபசப்பு அகலும் அரிப்பும் நீங்கும் . 4.சுடுநீரில் கைகால்கள் கழுவிவர தோல் மென்மையாகும் ,தோலில் மேல் தினமும் படியும் இறந்த செல்களில் கழிவுகள் நீங்கும் 5. வாரம் ஒருமுறை நீராவி பிடித்தால் முகம் பொலிவு பெறும் ,தலையில் கோர்த்திருக்கும் கெட்ட நீரும் இளகி சுவாசக்குழாய் வழியே வெளியேறும் 6. சளித்தொல்லையில் தொண்டை கரகரப்பு உண்டானால் சுடுநீர் குடித்தால் கமறல் மற்றும் இருமல் தீரும் 7.மேல் காய்ச்சல் அல்லது சளித்தொல்லை காலங்களில் வாயில் அதிகப்படியான எச்சில் சுரந்து கொழகொழ தன்மையாகவே இருக்கும் அந்த சமயங்களில் நல்ல சூடான நீரை குடித்தால் அந்த தன்மை நீங்கும் 8. வாந்தி எடுத்துவிட்டபின் வயிறு ஒருவித எரிச்சல் காரணமாக இறைந்து கொண்டிருக்கும் அந்த நேரம் சுடுநீர் குடிக்க இறைச்சல் அடங்கும் 9.உண்ட உணவு ஜீரணமாகாமல் நெஞ்சில் நின்று எரிந்துகொண்டிருந்தாலோ புளித்த ஏப்பம் வந்தாலோ உடனடியாக சுடுநீர் குடிக்க விரைவான ஜீரணம் கிடைக்கும் 10. மலக்கட்டு உள்ளவர்கள் சுடுநீரை அப்படியே குடித்தாலும் அல்லது சுடுநீரில் சிறிதளவு புளியை கரைத்துவிட்டு குடித்தாலும் மலக்கட்டு நீங்கும் 11. அன்றாடம் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் சுடுநீர் குடித்த பிறகு உணவு உட்கொண்டால் அதிக அளவு உணவு உண்பதை தவிர்க்கலாம் 12. ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னும் சுடுநீர் குடிப்பது ஜீரணத்திற்கு நல்லது 13. உடலில் உள்ள அதிக கொழுப்பை கறைத்து உடல் மெலிய வைக்கும் தன்மை சுடுநீருக்கு உண்டு ,உடல் எடை குறைக்க விரும்புவோர் காலை எழுந்து வெற்று வயிற்றில் சுடுதண்ணீர் குடித்தாலே உடல் பருமன் குறையும் 14.சுடுநீர் குடிப்பதால் உடல் இளகு பெரும் உடல் இறுக்கம் தளர்ந்து நல்ல வளையும்தன்மை கிடைக்கும். (flexibility ) 15.தினமும் ஒவ்வொரு வேளையும் சுடுதண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள வியர்வை தானாக வெளியேறும் ,வியர்வை வெளியேறினாலே பாதி நோய் நம்மை அண்டாது ஆகவே சிலர் கூறுவார்கள் வெந்நீரை குடித்தால் தாகம் தீராது என்று - ஆனால் உண்மையில் ஒரு பாட்டில் ஐஸ்தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம் ஒரு டம்ளர் வெந்நீரில் தீரும் ,சிறு வயதிலுருந்து வெந்நீர் குடிக்க பழகுவோருக்கு உடல் உபாதைகள் எதுவும் உண்டாகாது அவர்களின் நோய் தடுப்பு சக்தி அதிகப்படியாய் இருக்கும் உடல் உறுப்புகள் மற்றும் தோலின் மேன்மை வெந்நீரில் உள்ளது!

No comments:

Post a Comment