இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

நபிமொழி - 1


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி :

(அபூஅப்துல்லா என்கிற) நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'உங்களின் (தொழுகை) அணிவகுப்பை சமப்படுத்துங்கள். (இல்லையெனில்) உங்கள் முகங்களுக்கிடையே அல்லாஹ் வேறுபாட்டை (பிரிவை) உண்டாக்கி விடுவான்'  என்று நபி(ஸல்) கூற நான் நான் கேட்டேன்.(புகாரிமுஸ்லிம்).

ரியாளுஸ்ஸாலிஹீன்: 160)

-----------------------------------------------------------------


அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:'மரணித்த நபரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை: குடும்பம்அவனது சொத்துஅவனது செயல் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று தங்கி விடுகிறது. (அதாவது) அவனது குடும்பமும் அவனது சொத்தும் திரும்பி விடுகிறது. அவனது செயல் (அவனுடன்) தங்கி விடுகிறது. என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரிமுஸ்லிம்). ரியாளுஸ்ஸாலிஹீன்: 104)-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:'உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு  மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும்மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால்,இம்மையிலும்மறுமையிலும் அல்லாஹ் அவரின் (குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும் வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால்,அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 245)-----------------------------------------------------------------------------------------------------------------------------------அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் 'என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
ரியாளுஸ்ஸாலிஹீன்: 14)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ(ரலி)  அறிவிக்கின்றார்கள்:
பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால்அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விடதன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது,அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரிமுஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 15)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும்தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி,முஸ்லிம்).
ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

(அபூயஹ்யா என்ற)ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அறிவிக்கின்றார்கள்:


'ஒரு மூஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு மூஃமினை தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால்பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றதுஎன்று நபி(ஸல்) கூறினார்கள். '(முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 27)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:


'மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால்அவனுக்கு என்னிடம் கூலிசொர்க்கத்தைத் தவிர வேறு இல்லைஎன்று அல்லாஹ்கூறுவதாக'  நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி). 


( ரியாளுஸ்ஸாலிஹீன்: 32)
-----------------------------------------------------------------

அபூஸயீத்(ரலி)அபூஹூரைரா(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:

'ஒரு முஸ்லிமுக்கு சிரமம்நோய்கவலைதுக்கம் நோவினை,மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்என்று நபி(ஸல்) கூறினார்கள். 


'(புகாரிமுஸ்லிம்).    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)
--------------------------------------------------------------

அனஸ்(ரலி)அறிவிக்கின்றார்கள்:
'அல்லாஹ்,         தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால்அவனுக்கு உலகத்திலேயே தண்டனையை தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான்,இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.


'கூலியில் மகத்தானதுகடும் சோதனையுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். ஒருவன் அதில் திருப்தி அடைந்தால்அவனுக்கு (அல்லாஹ்வின்) திருப்தி உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால்அவனுக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 43)

-----------------------------------------------------------------


அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:'உரிமைகளை அதற்குரியவர்களிடம் மறுமையில் நிறைவேற்றித் தரப்படும். எதுவரை எனில்இறுதியில் கொம்பில்லா ஆடுகொம்புள்ள ஆட்டிடம் (அது முன்பு முட்டி இருந்தால்) பழி வாங்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 204)அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நிலத்தில் ஒரு சாண் அளவுக்கு (பிறரிடம் இருந்து பறித்து) ஒருவன் அநீதம் செய்தால், (அது போன்ற) ஏழு நிலங்களை (மாலையாக மறுமையில்) அவன் (கழுத்தில்) போடப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 206)அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நிச்சயமாக அல்லாஹ் அநீதக்காரனுக்கு (தண்டனை தருவதில்) தாமதம் செய்வான். பிறகு அவனை அல்லாஹ் பிடித்தால் அவனை விடவும் மாட்டான்'' என்று நபி(ஸல்) கூறி விட்டுபின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
''அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால்,இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.''  (அல்குர்ஆன் : 11:102) 
(புகாரிமுஸ்லிம்) -       ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 207)


----------------------------------------------------------------