இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

நபிமொழி - 2

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
----------------------------------------------------------------- 
நபிமொழி 

அல்லாஹ் கூறுகிறான்:
'...நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்...(அல்குர்ஆன் : 2:148)
'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும்,சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் அகலம் வானங்கள்பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133) 
-----------------------------------------------------------------
 அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சிநீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்று விடுவான்'  என்று    நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
ரியாளுஸ்ஸாலிஹீன்: 87)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:

 'பானத்தில் ஊதுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.''பாத்திரத்தில் தூசியை நான் பார்க்கிறேன்'' என்று ஒருவர் கேட்டார். ''அதை எடுத்துப் போடுவீராக'' என்று நபி(ஸல்)கூறினார்கள். ''ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்க முடிவதில்லை'' என்று அவர் கூறினார். ''உன் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக (விட்டுவிட்டுக் குடிப்பீராக)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாhர்கள்.  (திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 765)
-----------------------------------------------------------------
 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 'நபி(ஸல்) அவர்கள்பாத்திரத்தில் மூச்சு விடுவதையும்,அல்லது அதில் ஊதுவதையும் தடை செய்தார்கள். (திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 766)
-----------------------------------------------------------------
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்களுக்கு ''ஸம்ஸம்'' தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தேன். அவர்கள் நின்ற நிலையிலேயே குடித்தார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 767)
----------------------------------------------------------------
 அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 ''உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம். மறந்து (குடித்து) விட்டால் அவர் வாந்தி எடுக்கட்டும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 772)
----------------------------------------------------------------- 
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''தன் வேட்டியைத் தரையில் பட இழுத்து நடப்பவனைமறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 792)
----------------------------------------------------------------- 
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 ''வேட்டியில் இரண்டு கணுக்கால்களுக்கும் கீழிறங்கி இருப்பின்அது நரகில் உள்ளதாகும் என்று  நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 793)
-----------------------------------------------------------------
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 'உணவின் (தட்டின்) நடுவில் பரக்கத் இறங்குகிறது. (எனவே) அதன் ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள். அதன் நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது,திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 744)
-----------------------------------------------------------------
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''விரல்களையும்,தட்டையும் வழித்து உண்ண நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு நீங்கள் ''உங்கள் உணவில் எதில் பரக்கத் இருந்தது என்பதை அறியமாட்டீர்கள்''என்று கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 750)
-----------------------------------------------------------------
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

 'உங்கள் ஒருவரின் உணவு (கீழே சிதறி) விழுந்து விட்டால்,அதை அவர் எடுத்து,அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி,அதைச் சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம். தன் விரல்களை சூப்பும் வரை துண்டால் தன் கையைத் துடைக்க வேண்டாம். தன் உணவில் எதில் ''பரக்கத்''உண்டு என்பதை அவர் அறியமாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (முஸ்லிம்) 
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 751)
-----------------------------------------------------------------
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஷைத்தான் உங்களில் ஒருவரது அனைத்துக் காரியங்களிலும்,
வருகை தருகிறான். அவன் உணவு உண்ணும் போது கூட வருகிறான். உங்கள் ஒருவரது உணவு கீழே விழுந்து விட்டால் அதை அவர் எடுத்து,அதன் தூசியை அகற்றி விட்டு,பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதனை விட்டு விட வேண்டாம். சாப்பிட்டு முடித்து விட்டால் தன் விரல்களை சூப்பட்டும்! தன் உணவில் எதில் பரக்கத் உள்ளது என அவர் அறியமாட்டார் என்று நபி (ஸல்)கூறினார்கள்.'' (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 752)
-----------------------------------------------------------------
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒருவரின் உணவு இரண்டு நபர்களுக்குப் போதும். இரண்டு பேர் உணவு நான்கு நபர்களுக்குப் போதும். நான்கு நபர் உணவு,எட்டு நபர்களுக்குப் போதுமாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 756)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------