இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

நாவைப் பேணுங்கள்


நாவைப் பேணுங்கள்
- நிலோபர் நிஷா
-------------------------------------------------------------------------------------------------

மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது எது என்றால் நாக்கு என்று சொல்லலாம். ஒருவரிடம் தன்னடக்கம் இருக்க வேண்டுமென்றால் அவனிடம் நாவடக்கம் இருக்க வேண்டும். இந்த நாவை எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதன்படியே முடிவு இருக்கும்.

இந்த நாக்கில் நல்ல பெயர் கிடைத்து சிறந்த பெயரை வாங்கி மறுமையிலும் சிறப்பிடத்தைப் பெறுகின்றார்கள். சிலர் இந்த நாவால் தான் முறையற்ற வழியில் பேசிää மனிதர்களில் மட்டமான பட்டியலில் இடம் பெறுவது மட்டும் அல்லாமல்ää மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி அல்லாஹ் திருமறையிலும் நபி மொழியிலும் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடர வேண்டாம். நிச்சயமாக மறுமையில் செவிப்புலனும்ää பார்வையும்ää இருதயமும் இவை ஒவ்வொன்றுமே அதனதன் செயல் பற்றிக் கேள்வி கேட்கப்படும். (17:36)

எந்த ஒரு விஷயம் நமக்கு தெளிவாகத் தெரியவில்லையோ அதைப் பற்றிப் பேசக் கூடாது. அதுபோல் பேசுவது பல வழியிலும் மற்றவர்களுக்குத் துன்பம் தருவது மட்டுமல்லாமல்ää எவ்வளவு பெரிய தவறாகி விடுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் : புகாரிää முஸ்லிம்).

ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) ஆதாரம் : புகாரி)

மனிதர்கள் எல்லாம் ஒரு இடத்தில் சந்தித்தால் அந்த இடத்தில் புறம் பேசி விடுவார்கள். இதில் அதிகமாக ஆண்களை விட பெண்கள் தான் முதலில் இருப்பார்கள். வீட்டு வேலை முடிந்து விட்டதா? உடனே அடுத்த வீட்டுக்குச் சென்று அடுத்தவர் கதையை பேசுவதே வாடிக்கையாகி விட்டது. அவர்களிடம் ஏன் இப்படி புறம் பேசுகின்றீர்கள் என்று கேட்டால்ää என்ன சொல்வார்கள் தெரியுமா? நாங்கள் என்ன புறமா? பேசுகிறோம். இல்லாததையா பேசுகிறோம் என்று கேட்கின்றார்கள்.

எந்த அளவுக்கு இந்த புறம் பேசுவதை நபி (ஸல்) அவர்கள் ஹதீஸில் சொல்லியுள்ளார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள் என்று பதிலளித்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுதலைப் பற்றிக் கூறினார்கள் :
உனது சகோதரன் எதை வெறுப்பானோ அதை அவன் இல்லாத போது கூறுவதாகும். அப்போது நான் கூறுவது எனது சகோதரனிடத்தில் இருந்தாலுமா என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ சொல்வது உன்னுடைய சகோதரனித்தில் இருந்தால் அவதூறு என்று கூறினார்கள். (முஸ்லிம்)
புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலேää அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்). மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி) ஆதாரம் : அஹ்மது)

புறம் நாம் பேசாமல் இருக்க வேண்டும். அடுத்தவர் பேசும் பொழுது அதை நாம் தடுத்து விட வேண்டும். அல்லது அந்த இடத்தை விட்டுச் சென்று விட வேண்டும். புறம் பேசுவதைத் தவிர்ப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுதுää எவர்களுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆதாரம் : புகாரிää முஸ்லிம்.
அனுமதிக்கப்பட்ட புறம் புறம் பேசுதலைத் தடுத்திருந்தாலும் சில நேரங்களில் அவை அனுமதிக்கப்படுகின்றன. மக்களை எச்சரிக்கை செய்வதற்காக ஒருவரின் குறையை எடுத்துக் கூறலாம். ஒருவரைப் பற்றி ஆலோசனை கேட்கும் பொழுதுää அவரது நிறைகளை எடுத்துக்காட்டலாம். மார்க்கச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்காக ஒருவரைப் பற்றிää அவரின் குறைகளை எடுத்துக் கூறலாம். இதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கின்றது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கு அனுமதி வழங்குங்கள். இவர் தன்னுடைய கோத்திரத்திலேயே மிகவும் கெட்டவர் என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரிää முஸ்லிம்)

ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றைக் கூறி இவருக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்துவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. எத்தனையோ பேர் கொலை கூடச் செய்யப்பட்டுள்ளனர். இப்படிப் பெரும்பாதிப்பு இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லை. இப்படிக் கோள் சொல்லித் திரிபவர்கள் சுவனம் போக முடியாது. கப்ரில் வேதனை உண்டு என்று இஸ்லாம் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

புறம் பேசித் திரிபவருக்குக் கேடு தான்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:01).
கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரிää முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்கிறார்கள். அப்போது இவர்கள்
இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இவ்விருவரில் ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் எனக் கூறி விட்டுää ஒரு பசுமையான பேரித்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லிää அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட போதுää அந்த இரு மட்டைத்துண்டுகளும் காயாமல் இருக்கும் பொழுதெல்லாம்ää அந்த இருவரின் வேதனை குறைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரிää முஸ்லிம்.

நாவிற்கு நரம்பில்லை என்பதற்காக..ää நாம் எப்படி வேண்டுமானாலும் வளைத்துப் பேசலாம் என்று எண்ணுபவர்கள் பலர். அல்லாஹ் கூறுகிறான் :
பொய்யான சொல்லை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் (22:30)

செய்த உதவியை சொல்லிக் காட்டாதீர்கள்

ஏழைகளுக்குப் பண உதவியோ அல்லது பொருளுதவியோ செய்து விட்டு அவர்களுக்குள் ஏதோ வருத்தம் வந்து விட்டால்ää செய்த உதவியைச் சொல்லிக் காட்டி விடுகின்றார்கள். இப்படிச் சொல்லிக் காட்டுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் எந்தளவுக்கு இந்த செயல் மிகக் கேவலமானது என்று கூறியிருக்கின்றார்கள் என்று பாருங்கள்.
எவன் செய்த உதவியைச் சொல்லிக் காட்டுகின்றானோää அவன் வாந்தி எடுத்து விட்டு அதைத் திரும்பச் சாப்பிடுவதற்குச் சமம் (ஆதாரம் : புகாரி)

மக்களிடம் சொல்லிக் காட்டுவது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மாதிரியான விஷயத்தில் அதிகம் பெண்கள் தான் செய்கின்றார்கள். அவர்கள் இதைக் கேவலமாக நினைப்பதில்லை. பேச்சு கிடைத்தால் போதும். தன்னைப் பற்றிப் பேசிää பின் தன்னுடைய தற்பெருமையைப் பேசிää பின் தான் மற்றவர்களுக்குச் செய்ததைப் பேசிää ஆனால் இப்பொழுது என்னைக் கண்டு கொள்வதில்லை நான் இல்லை என்றால் இவன் முன்னுக்கு வந்திருக்க மாட்டான் என்றெல்லாம் பேசுகின்றார்கள். அல்லாஹ் நாடியதால் தான் முன்னுக்கு வந்தானே தவிர ஒருவன் செய்த உதவியால் அவன் முன்னேறி இருக்க முடியாது. அவனைக் கொடுக்கச் சொல்லிää உணர்வைக் கொடுத்தது இறைவன். அதை மறந்து விடுகின்றார்கள். நான் நான் என்று ஆணவம் கொண்டு விடுகின்றார்கள்.

மறுமை நாளில் கைசேமடையக் கூடிய மூவர்..!

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று பேர்களுடன் பேச மாட்டான். அவர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கைசேதப்பட்ட நஷ்டமடைந்த அந்த நபர்கள் யார்? என்று அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். தனது கீழாடையைப் பெருமைக்காக கரண்டைக்குக் கீழ் தொங்க விடுபவன் தான். செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுபவன். பொய் சத்தியம் செய்து தன்னுடைய சரக்கை விற்பனை செய்பவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
யாரையும் திட்டாதீர்கள்

முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
உயிரோடு இருக்கும் பொழுதும் திட்டுவார்கள். அவர்கள் இறந்த பின்னும் அவர்களைத் திட்டுவதைப் பார்க்கலாம். அப்படித் திட்டக் கூடாது.
இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில்ää அவர்கள் எதனை முற்படுத்தினார்களோ அதனை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி

காலத்தையும் இந்த நாவினால் தான் திட்டுகின்றார்கள். இயற்கையின் காரணத்தினால் ஏற்படும் இழப்புகள் தொழில் நஷ்டம்ää உயிர் இழப்புகள் இப்படி பல விஷயத்தைக் காரணம் காட்டித் திட்டுகின்றார்கள். இது போல் திட்டக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :
காலத்தைத் திட்டுவதன் மூலம் ஆதமுடைய மகன் எனக்கு நோவினை தருகின்றான். நானே காலமாக இருக்கின்றேன். இரவையும் பகலையும் நானே மாறி வரச் செய்கின்றேன். அவற்றின் அதிகாரம் எனது கையில் இருக்கின்றது என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) ஆதாரம் : புகாரி)

எல்லாமே நாவினால் தான்..

ஒரு குடும்பத்தில் மாமியார் பிரச்னை வருவது நாவினால் தான். உறவினர்கள் பிரிந்திருப்பது கூட நாவினால் தான். நாவினைப் பேணிக் காத்தால் புறம் பேசுதல்ää கோள் சொல்லுதல்ää சபித்தல்ää பொய் சாட்சி சொல்லுதல்ää தர்மம் செய்வதைச் சொல்லிக் காட்டுதல்ää முறையின்றித் திட்டுதல்ää அண்டை வீட்டாரைத் திட்டுதல் பெற்றோரைத் திட்டுதல்ää அவதூறு போன்ற எல்லாவற்றையும் விட்டு தவிர்த்துக் கொள்ள முடியும். எல்லா செயல்களுக்கும் நாக்கு தான் காரணமாக உள்ளது. மூன்றங்குள நாக்கு ஆறடி மனிதனைக் கொன்று விடுகின்றது. எனவே நாம் நாவினைப் பேணி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனை உற்சாகமூட்டக் கூடியதும் நாக்கு தான். அதைப் போன்று அவனைக் கோழையாக்கக் கூடியதும் நாக்கு தான். அனைத்துப் பிரச்னைக்கும் காரணம் நாக்கு தான். நாவினைப் பேணிக் காத்தால் எந்தப் பிரச்னையும் இம்மையிலும் இருக்காது. மறுமையிலும் இருக்காது. நாவினைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டு அதிகம் நன்மை பெற்றுக் கொண்ட நல்லடியாராக ஆகி விடுவோமாக!