இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jan 7, 2011

அல் பத்தானி - வானவியல் துறை


வானவியல் துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றியப் பங்கு அளப்பரியது.

வானசாஸ்திரம் பற்றிய முறையான ஆய்வு 8 ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல் மன்சூருடைய காலத்தில் பாக்தாத் நகரில் துவங்கியது.

முதல் கட்டமாக இந்திய, பாரசிக, கிரேக்க மொழிகளில் இருந்த வானசாஸ்திர நூல்களை எல்லாம் அரபி மொழியில் மொழியாக்கம் செய்தனர்.

வான ஆராய்ச்சியில் முஸ்லிம்கள் பெரும் ஆர்வம் காட்டியதன் விளைவாக மிக குறுகியக் காலத்தில் எண்ணற்ற முஸ்லிம் வானவியலாளர்கள் உருவாகியதோடு, 10 ம் நூற்றாண்டின் இறுதியில் பாக்தாத் பெருநகரில் முஸ்லிம் வானவியல் அறிஞர்கள் ஒன்றுக் கூடினர். 11 ம், 12 ம் நூற்றாண்டுகளில் ஸ்பெயினில் வானாராய்ச்சி செழித்தோங்கி வளர்ந்தது. இந்த காலக்கட்டத்தில் விண் ஆராய்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர் முஸ்லிம் விஞ்ஞானிகள். மேலும் இத்துறை குறித்து அரும் பெரும் படைப்புகளையும் உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

13 ம், 14 ம் நூற்றாண்டுகளில் இந்த வானாராய்ச்சி சாதனையின் சிகரத்தை தொட்டது. இந்தக் காலக்கட்டங்களில் யூதர்களும் கிறித்துவர்களும் லத்தின் மற்றும் ஹிப்ரு மொழியில் இந்த படைப்புக்களை எல்லாம் மொழிப்பெயர்த்தனர். வானவியல் துறையில் கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததாக சொல்லப்படும் டாலமி (Ptolemy ) என்பவர் எழுதிய "Almagest " என்ற பிரபல்ய வானநூல் ஸ்பெயின் முஸ்லிம் விஞ்ஞானிகளால் நன்கு அலசி ஆராயப்பட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது குறிபிடதக்கதொரு நிகழ்வாகும்.

இது மட்டுமின்றி வானசாஸ்திர அட்டவணைகளை (Astronomical Tables ) தொகுத்ததன் மூலம் நட்சத்திரங்களின் நிலைகளையும் அளவுகளையும் பிரதிப்பலிக்கும் வான் கோளங்களை முஸ்லிம் வானவியலாளர்கள் தயாரித்தனர்.

இப்ராஹீம் இப்னு ஹபீப் அல்பாசாரி என்பவர்தான் முதன் முதலில் சூரியனின் உயர்வை அளக்கும் astrolabe என்ற கருவியை கண்டுப்பிடித்தார். இதனை தமிழில் சூரிய உயர்வு மானி என்றழைக்கலாம்.
இந்தக் காலப்பகுதியில் தோன்றிய

வானவியலாளர்களிலே மிகவும் பிரசித்திப் பெற்றவர் அப்துல்லாஹ் முஹம்மது இப்னு ஜாபிர் சீனான் அல்பத்தானி என்பவராவர். இவர் வாழ்ந்தக் காலம் கி பி 858 - 929 ஆகும். அல்பத்தானி இளம் வயதிலிருந்தே 42 ஆண்டுகள் தொடர்ந்து வானாராய்ச்சியில் ஈடுப்பட்டு முக்கியமான பல கண்டுப்பிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். இவருடைய மிகவும் முக்கியமான கண்டுப்பிடிப்புகளில் ஒன்றுதான் 365 நாட்கள், 5 மணி நேரங்கள், 46 நிமிடங்கள், 24 வினாடிகள் என்று சூரிய ஆண்டுக் கணக்கை தீர்மானித்ததாகும். இது இன்றைய நவீன விண்ணாராய்ச்சி மதிப்பீட்டிற்கு ஒத்ததாக விளங்குகின்றது.

அபுல் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் சூபி என்பவர் 10 ம் நூற்றாண்டில் மாபெரும் வானவியல் அறிஞராக திகழ்ந்தார். இவர் வாழ்ந்தக் காலம் கி பி 903 - 966 வரை ஆகும். இவர் பாரசீகத்தை சார்ந்தவர். இவர்தான் முதன்முதலில் நட்சத்திரங்களின் நிறம். அளவில் தென்படும் மாற்றதியும் அவற்றின் சரியான இயக்கத்தையும் பற்றிக் கண்டறிந்தார். இவர் எழுதிய சுவார் அல் கவாகிப் (நிலையான நட்சத்திரங்களின் நூல்) மிகவும் பிரபல்யமானது.

இவ்வாறு வானவியல் துறையில் விண்மீன்களைப் போன்று பிரகாசிக்கும் எண்ணற்ற முஸ்லிம் வானவியலாளர்களின் வாழ்வு, ஆராய்ச்சிப், சாதனைப் பற்றிய பட்டியல் நீண்டுக் கொண்டு செல்கிறது

No comments:

Post a Comment