இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 19, 2010

நபிமொழி - 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

*********************************************************************************
அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

'நிச்சயமாக அல்லாஹ், உங்களின் உடல்களையோ, உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும், உங்களின் செயல்களையும் பார்ப்பான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 7)

***********************************************************************************
அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அறிவிக்கின்றார்கள்:

'மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் ' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 14)

**********************************************************************************
அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின் (குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும் வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 245)

**********************************************************************************
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி,முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)

*************************************************************************************(அபூயஹ்யா என்ற)ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'ஒரு மூஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு மூஃமினை தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 27)

*************************************************************************************

அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை' என்று அல்லாஹ்; கூறுவதாக' நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 32)

*************************************************************************************அபூஸயீத்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:

'ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி, முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)



''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
*************************************************************************************



இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்

M.முஹம்மது இஸ்மாயில்
ismail.nishra@yahoo.com
rojaesmail@yahoo.com
mohd.esmail@yahoo.com
mbhaseer@yahoo.com
00971 50 185 44 13


மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில்(நன்மையோ தீமையோ)
பல வேலைகளில் ஈடுபட்டு கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய்.
பின்னர் மறுமையில் அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்..!(திருக்குர்ஆன் 84-6)

No comments:

Post a Comment