இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 19, 2010

ஈராக் போர்:பொய்களை கூறியும்

ஈராக் போர்:பொய்களை கூறியும்,போலி ஆவணங்களை காட்டியும் கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன்

Posted: 19 Jul 2010 08:38 PM PDT

லண்டன்:ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை என்று ஐ.நா.விற்கான யு.கே. தூதர் ரோஸ் தெரிவித்துள்ளார்.

வர்த்தகத் தடைகளின் மூலம் ஈராக்கின் பிரச்சனைகளை சமாளித்திருக்கலாம் என்றும்,ஜோர்டானில் உள்ள சதாம் ஹுசைனின் வங்கி கணக்குகளை இதுவரை யு.எஸ். மற்றும் யு.கே. நாடுகள் முடக்காததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

ஈராக் போரை அறிவிக்கும் முன் அரசு பதவியிலிருந்து ராஜினாமா செய்த ரோஸ்,சதாமிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாக் கூறி சமர்பிக்கப்பட்ட போலி ஆவணங்களையும், ஆதாரங்களையும் நினைவு கூர்ந்தார்.

துரதிஷ்டவசமான ஆவணங்கள், எண்ணிக்கூட பார்க்க இயலாத பொய்கள் தான் பிரிட்டனை ஈராக் போரில் பங்குபெறச் செய்ததாகவும் தெரிவித்தார்.

ஆந்த்ராக்ஸ் எனப்படும் ரசாயனம் ஈராக்கிடம் இருப்பதாகவும், அதன் ஒரு டீஸ்பூன் ஒரு மில்லியன் மக்களை கொல்லக்கூடியது என்று கூறப்பட்டது; 45 நிமிடத்திற்குள் ஈராக் உலநாடுகளின் மீது 2002ல் ஏவுகனை தாக்குதல் நடத்தும்;இன்னும் 5 வருடங்களில் கேடு விளைவிக்கும் மோசமான ஆயுதங்களை ஈராக் தாயாரிக்கும் என்பது போல பல கட்டுக் கதைகளால் பிரிட்டன் நம்ப வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டதாகவும், ஈராக் பற்றிய உண்மையல்லாத பொய்கள் அவைகளில் சேர்கப்பட்டதாகவும் அவர் மேலும் விவரித்தார்.

இந்த ஆவணங்களை வெளிக் கொண்டுவரவும் தான் தயார் என்றும் ரோஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment