இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 24, 2010

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஊடகங்க.....ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஊடகங்கள் அவமானப்படுத்தியதை விசாரணை செய்ய வேண்டும்: ஹிந்துத்துவா அமைப்புகள்

Posted: 23 Jul 2010 12:56 AM PDT

ஹூப்ளி,ஜூலை.22:சில தனியார் தொலைக்காட்சிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் சில ஹிந்து அமைப்புகளை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருப்பதை மத்திய அரசு உடனே விசாரிக்க வேண்டும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் ப்ரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தேசவிரோத அமைப்பு என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. சில தனியார் தொலைக்காட்சிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 85 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது, அதன் தேசப்பற்றும் தெரிந்ததே. நாட்டை கலாச்சார வழியில் அமைக்கும் பணியில் அதன் பங்கை எடுத்துகூற முடியாது.

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கு பிரம்மாண்டமானது. சில தனியார் தொலைக்காட்சிகள் தவறான செய்திகளை பரப்பிவருவது துரதிஷ்டவசமானது." என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment