ராமநாதபுரம் : மதுரையில் கடத்தி நரபலி கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் உடல் ஏர்வாடியில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சிரின் பாத்திமா. இவர் தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன், மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கியிருந்தார். காதர் யூசுப் கடந்த 2ம் தேதி மாயமானான்.
இதுகுறித்து தனிப்படையினர் விசாரித்தனர். அதே தர்காவில் தங்கி இருந்த தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணத்தை சேர்ந்த அப்துல் கபூரும், அவரது மனைவி ரமலா பீவியும் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. மாந்திரீகத்தில் அதிகப்படியான சக்தி பெறுவதற்காக குழந்தையை நரபலி கொடுத்து, தலை வேறாக உடல் வேறாக துண்டு, துண்டாக வெட்டி பல இடங்களில் அப்துல் கபூர் புதைத்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அப்துல் கபூரும், ரமலா பீவியும் கைது செய்யப்பட்டனர்.
புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அவர்கள் இரண்டு பேரையும் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் சேர்மன் தெருவுக்கு போலீசார் நேற்று கொண்டு வந்தனர். புதைத்த இடத்தை அப்துல் கபூர் காட்டினார்.
குழந்தை காதர் யூசுப் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். குழந்தை கடைசியாக அணிந்திருந்த சட்டையை வைத்து, சிரின்பாத்திமா கதறி அழுதபடி அடையாளம் காண்பித்தார். அங்கேயே மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் இருந்த குழிக்குள் பூஜை செய்தற்கான யந்திர தகடுகளும், ஜப மாலைகளும் இருந்தன.
பச்சிளம் குழந்தையை நரபலி என்ற மூடநம்பிக்கையால் கொடூரமாக கொன்ற அப்துல் கபூரையும், ரமலா பீவியையும் அடித்துக் கொல்ல வேண்டும் என அங்கு கூடியிருந்த ஆண்களும், பெண்களும் ஆவேசக் கூச்சலிட்டனர்.
போலீஸ் வேனில் இருந்த அவர்களை தாக்குவதற்காகவும் ஓடிச் சென்றனர். போலீசார் தலையிட்டு கூட்டத்தை விரட்டினர்.
இதே போல் திருச்செந்தூர் அருகே கடற்கரையில் குழந்தையின் தலையை புதைத்த இடத்தை தம்பதியர் அடையாளம் காட்டினர். அங்கு குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது. பாலிதின் கவரில் அழுகிய நிலையில் தலை இருந்தது. அதனுடன் தாயத்து மற்றும் தகடும் இருந்தது.

No comments:
Post a Comment