இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 28, 2010

பாகிஸ்தானில் விமானம் மலையில்

பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்

பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி     114 பயணிகள் பலி;    45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
இஸ்லாமாபாத், ஜூலை 28-
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லா மாபாத்துக்கு இன்று காலை “ஏர்புளூ” என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லாமாபாத்தை நெருங்கி கொண்டிருந்தது.
இஸ்லாமாபாத் அருகே உள்ள மார்காலா மலைக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள்.
விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கி கிடந்தது தெரிய வந்தது.
அந்த இடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை.
மலையின் உச்சி பகுதியில் விமான பாகங்கள் நொறுங்கி கிடந்தன. அதில் இருந்து தீப்பிளம்பும், புகையும் வந்தபடி இருந்தன.
விமானம் கிடக்கும் இடத்துக்கு செல்ல சாலை வசதி ஏதும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினரை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு கீழே இறக்கினார்கள்.
அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் இறந்து கிடந்தனர். சிலர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டனர்.
இதுவைர 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத் பகுதியில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இன்று விமானம் அங்கு வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. மேக மூட்டமும் அதிகமாக இருந்தது. எனவே வானிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தன
ர்

No comments:

Post a Comment