இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 21, 2010

**** நற்குணம் *****


**** நற்குணம் *****

இந்தியாவை ஆட்சிபுரிந்த மன்னர்களில் நாஸிருத்தீன் என்பவரும் ஒருவர். இவர் மிக மிக நேர்மையானவர். எளிமையானவர். மாபெரும் மன்னராக இருந்தபோதும், தமது சொந்தச் செலவுக்காக அரசுப் பணத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாகத் தொழில் செய்துவந்தார்.

மன்னர் நாஸிருத்தீன் அரபி எழுத்துகளைத் திறமையாக, மிக அழகாக எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். திருக்குர்ஆ... See Moreனை அழகுபட எழுதி, அப்பிரதிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்.

ஒருமுறை தொழில் அதிபர் ஒருவர் மன்னரைக் காண வந்திருந்தார். அவரிடம் தம் கையால் அழகுபட எழுதிய திருக்குர்ஆன் பிரதியை மன்னர் காண்பித்தார். அத்தொழில் அதிபர் அதைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார்.

சற்று நேரம் அப்பிரதியை உற்றுநோக்கிவிட்டு, அதில் ஒரு பிழை இருப்பதாகவும், அதைத் திருத்திக் கொள்ளும்படியும் மன்னரிடம் கூறினார்.
உண்மையில் அங்கு எந்தப் பிழையும் இல்லை.

ஆயினும் மன்னர் புன்சிரிப்புடன் அந்தத் தொழில் அதிபர் கூறியதை மறுக்காமல் அவருக்கு நன்றி தெரிவித்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கோடிட்டுக் கொண்டு, பின்னர் திருத்தம் செய்வதாகவும் கூறினார்.

அத்தொழில் அதிபர் அங்கிருந்து சென்றதும் அந்தக் கோட்டை மன்னர் அழித்துவிட்டார். சுற்றியிருந்தவர்கள் காரணம் கேட்டனர். அதற்கு மன்னர், “அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எந்தப் பிழையும் இல்லையென்று எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆயினும் அவர் நமது விருந்தினராக வந்திருந்தார். அவர் கூறுவதை மறுத்தால் அவருக்கு மதிப்புக் குறைவும் மனவருத்தமும் ஏற்படும் அல்லவா? அதை நான் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வாறு செய்தேன்’’ என விளக்கினார்.

அந்த மாமன்னரின் நற்பண்பைக் கண்டு அரண்மனையிலிருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த வாரப் பிரார்த்தனை

‘இறைவா! அனைத்துச் செயல்களிலும் எங்களுடைய நிலைமையைச் சீர்படுத்துவாயாக. மேலும் இம்மை வாழ்வின் இழிவிலிருந்தும், மறுமை வாழ்வின் தண்டனையிலிருந்தும் காத்தருள்வாயாக.

No comments:

Post a Comment