இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 21, 2010

முஸ்லீம் ஒற்றுமை


அஸ்ஸலாமு அலைக்கும்,

சிந்திப்பீர்........ செயல்படுவீர்.........
முஸ்லீம் சமுதயமே............. நாம் தான் ஒற்றுமையுடன் இருந்து நமது சமுதயத்தையும், நமது உரிமையையும் நாம் தான் காப்பாற்ற வேண்டும்....... ஒற்றுமையுடன் இருந்தால் நம்மையும், நமது சமுதாயத்தையும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது...... சிந்திப்பீர்........ செயல்படடுவீர்.........

முஸ்லீம் தலைவர்களே........... நீங்களும் சிந்தியுங்கள்.......... நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ...........

நண்பர்களே இந்தக் கேள்விக்கு நம் அனைவருக்குமே பதில் தெரியும்…… இஸ்லாமியர்கள் எவருக்கும் ஒரே அல்லாஹ் - ஒர் இறைவன் என்பதில் மாற்றுக் கருத்தது நிச்சயமாக கிடையாது. வேண்டுமானால் சில பேருடைய செயல்பாடுகள் இணைவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம். ஆக நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற குடையின் கீழ் முதலில் வரவேண்டும்…. பின்னர் சகோதராரே நீங்கள் கேட்கும் கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். இன்று நாம் அனைவரும் இருக்கும் பத்திரிக்கையோ, அல்லத புதிதாக ஒரு பத்திரிக்கையை பார்த்தாலே முதலில் கேட்டும் கேள்வி இஸ்லாமிய பத்திரிக்கையா? என்பதை விட… எந்த ஜமாத்தை அல்லது எந்த இயக்கத்தைச் சார்ந்த பத்திரிக்கை என்பதுதான். பத்திரிக்கை குர்ஆன் மற்றும் நபிமொழிக்கு உட்பட்டதாக இருந்தாலும் எந்த இயக்கத்தைச் சார்ந்தது அல்லது ஜமாத்தை சார்ந்தது என்பதை அறிந்து கொள்ளவே ஆர்வமாக இருக்கின்றோம். அதையும் தாண்டி சில சமயம் நல்ல கருத்துக்களையும், கட்டுரைகளையும் உடைய பத்திரிக்கையாக இருந்தால் நாம் சாராத இயக்கத்துக்கு உட்பட்டதாக இருந்தால் அப்பத்திரிக்கையை வாங்க வேண்டாம், படிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யும் நிலையில்தான் நம் சமுதாயம் இருக்கிறது,,, அப்புறம் உங்களுடைய கேள்விக்கு எப்படி பதில் கிடைக்கும்…. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்வோம்…..

வாருங்கள் இளைஞர்களே! ஓரணியில் ஒன்று திரள்வோம்
சத்தியத்தை உணர்ந்தால் தியாகங்கள் எளிதாகும்
உணர்ந்த சத்தியத்தை பிறருக்கும் எடுத்துச் சொல்வோம்
அநீதிகளை, அக்கிரமங்களை வேரோடு அழித்தொழிப்போம்....


இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்

No comments:

Post a Comment