இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 19, 2010

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன

ஊடகங்களின் மறைத்தலும்
திரித்தலும் – தீர்வு என்ன? (ஆக்கம்-1)

எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும்
சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று
படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச்
சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு
வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை
இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு,
குண்டு வெடிப்பு நடத்தி, முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின்
சதி, 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் பார்வையில் செய்தியாகப் படவில்லை.
விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள்
பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப்
பார்க்கின்றோம். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று
அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று
அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம். மேலும்...

முஸ்லிம்களும்
ஊடகமும் : வீழ்ச்சியின் எல்லையிலும் எழுச்சியின் துவக்கத்திலும்

மீடியா என்பது எவ்வளவு பெரிய சக்தி பெரும் ஆயுதம் என்பதை இந்த அற்புதமான,
ஆழமான கருத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். உலகத்தில் நிகழும் ஆட்சி
மாற்றங்கள், புரட்சிகள் சார்பான மக்கள் அபிப்பிரயாங்கள் என அனைத்தும்
மீடியாவின் ஊடாகவே நடைபெற்று வருகின்றன. உலகில் முடுக்கிவிடப்பட்டிருக்கும்
யுத்தங்களும் முடித்துவைக்கப்படும் யுத்தங்களும் மீடியாவிற்கூடாகத்தான்
நடைபெறுகின்றன. அந்தளவுக்கு சக்திவாய்ந்த ஆயுதமாக மீடியா விளங்குகின்றது.
எனவே, ஊடகத்தை 21ம் நூற்றாண்டின் சக்தி என வர்ணிக்க முடியும். மேலும்...

முஸ்லிம்களும்
ஊடகங்களும்

இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ்
கொண்டுவந்து இணைத்துவிடுகிறது. டாட்காம், வெப்காம், பிளாக், இ-மெயில்,
சாட்டிங், டேட்டிங், ஃபாரம், ஆன்லைன் என்று உலக மீடியாக்களில் இணையம் இமாலய
முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. நம் சமுதாய மக்களோ இன்னும்
கம்ப்யூட்டர் என்றால் என்ன? சாஃப்ட்வேர் என்றால் என்ன? ஹார்ட் வேர் என்றால்
என்ன? என்று கணினி பற்றிய உபயோகம் குறித்து அறியாமலே இருக்கிறார்கள். மேலும்...

ஊடகங்களின் மறைத்தலும்
திரித்தலும் தீர்வு என்ன? (ஆக்கம்-2)

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்
எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம்
எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய
தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை
பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். சமூகத்தின்பால்
நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில்
பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான
வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து
வருகிறது. மேலும்...

#yiv1516782263 {font-family:Arial, Helvetica, sans-serif;font-size:12px;}

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க

http://www.ottrumai.net/TArticles/index.htm
இப்படிக்கு
ஒற்றுமை இணையக்குழு
www.ottrumai. net

No comments:

Post a Comment