இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 19, 2010

நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று சர்க்கரை விரைவில் அறிமுகம்!

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான பராகுவே நாட்டில் உள்ள மக்கள் அங்கு விளையும் ஸ்டீவியா என்ற ஒரு வகை மூலிகைச் செடியின் இலைகளை பறித்து காய வைத்து பின்னர் அதை பொடியாக்கி, அதை சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்துகிறார்கள்.
நல்ல மணம் கொண்ட இந்த பவுடரை அந்த நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஸ்டீவியா மூலிகை செடியிலிருந்து தயாராகும் இந்த இனிப்பு தூளானது சர்க்கரையை விட 200 முதல் 300 மடங்கு இனிப்பானது ஆகும். என்று ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நல்ல மணமும் வாசனையும் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் நன்கு வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம்.

மேலும் இந்த ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதில் கலோரி எதுவும் இல்லையென்பதால் இதை பயன்படுத்துபவர்களுக்கு பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் பரி சோதனையில் கண்டுடறியப்பட்டு உள்ளது.

ஸ்டீவியா செடிகளை இந்தியாவில் பயிரிடப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது. என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறினார்.




நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment