இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 19, 2010

இருதய அடைப்பை உடைக்க முடியாதா?

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.


இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.


தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.


எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.Source: Vanjoor http://paalaivanath oothu.blogspot. com/

>துபாய்: தமிழகத்தில் நான்கு மனைவிகள், அவர்கள் மூலம் பிறந்த 12 குழந்தைகள், சொத்துக்கள் என எல்லாம் இருந்தும், அனைவரும் கைவிட்டு விடவே, துபாயில் கடைசி நேர உயிர்த் துடிப்பில் மன நலம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது. ஆனால் அவரது மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது, அதன் பின் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது என்று தகவலும் கிடைத்தது. அவரை சென்று பார்த்தோம், அவர் உறங்கிக் கொண்டிருந்தார், மீண்டும் ஒருநாள் முயற்சி செய்து அவர் விழித்திருக்கும் போது சென்று அவரிடம் பேசியபோது அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. ஒரு சில விஷயங்களைத் தெளிவாக பேசினாலும் பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். உதாரணத்திற்கு, தான் தினந்தோறும் இரவு நேரங்களில் துபாயிலுள்ள வீட்டுக்கு சென்று விடுவதாகவும், பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு வந்துவிடுவதாகவும் சொல்கிறார். ஆனால் விசாரணையின் போது நம்முடன் இருந்த நர்ஸ் அவர் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து யாரும் வந்து பார்க்கவுமில்லை, இதுவரை மருத்துவமனையை விட்டு இவர் சென்றதுமில்லை எனக் கூறினார். அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசி அவரைப் பற்றிய விபரங்களைத் தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யும் போது ஏதாவது தொடர்பு எண் அவருக்கு நினைவுக்கு வருகிறதா என சோதிக்கும் போது துபாயிலுள்ள ஒரு லோக்கல் நம்பரைச் சொன்னார் அதை ஆர்வமாக டயல் செய்துப் பார்த்தால் அந்த எண் தவறாக இருந்தது. ஊரில் ஏதாவது எண் நினைவில் இருக்கிறதா என கேட்கும் போது கொஞ்ச நேரம் யோசித்து ஒரு நம்பரைச் சொன்னார் அதை நம்பிக்கையில்லாமல் டயல் செய்யும்போது அது ரிங் ஆனது, அதில் அவரது மகள் வசுமதி பேசினார். இவரைப் பற்றி சொல்லும்போது நிதானமாக கேட்டுவிட்டு அவருடன் கடந்த 25 வருட காலமாக தொடர்பில் இல்லை எனவும், ஆகையால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறிவிட்டார். மேலும், தனது தம்பி சுந்தரிடம் பேசுங்கள் என சொல்லி ஒரு நம்பரைத் தந்தார். சுந்தரைத் தொடர்புக் கொள்ளும்போது அவரும் கடந்த 25 வருட காலமாக எங்களுக்குள் எந்தவித தொடர்புமில்லை எனக் கூறினார். அதனைத் தொடந்து சுந்தர் சொன்ன விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. துபாய்க்கு டிரைவராக வந்து, பிறகு சொந்தமாக 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்து தொழில் செய்து செல்வச் செழிப்போடு இருந்த ராஜகோபால், தன் வாழ்க்கையில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்திருக்கிறார். நன்றாக இருந்த காலத்தில் தந்தையாக இருந்து செய்யவேண்டிய எந்த கடமையையும் ராஜகோபால் செய்யவில்லையெனவும், அவசர தேவைக்குக் கூட பண உதவி செய்ததில்லை எனவும் வேதனையோடு சுந்தர் கூறினார். முதல் மனைவியைத் திருமணம் செய்து சிறிது நாட்களில் விட்டுவிட்டு இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் ஒரு கிருஸ்துவ மதப் பெண்ணை கோயம்புத்தூரில் திருமணம் செய்திருக்கிறார். கடைசியாக துபாயில் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்யும் போது ராஜகோபாலும் முஸ்லிமாக மாறியிருப்பதாகவும் சுந்தர் கூறினார். மேலும், ராஜகோபால் கடைசியாக அதிகமாக தொடர்பில் இருந்தது திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியிடத்தில்தான் எனவும், சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவியின் பேரில்தான்; உள்ளது எனவும், அவர்கள்தான் அவரை கவனிக்க வேண்டுமெனவும் கூறி முடித்துக் கொண்டார். திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியின் தொடர்பு எண்ணை சுந்தரிடமிருந்து வாங்கி அவரிடம் பேசும் போது, சம்பாதித்து எங்களுக்கு தந்தது உண்மைதான். ஆனால் இந்த வீட்டைத் தவிர எந்த சொத்துமில்லை. அவருக்கு மருத்துவ செலவு பார்க்க, கவனிக்க எங்களால் முடியாது எனக் கூறிவிட்டார். ஆகையால் இப்போது தாயகத்திற்கு அனுப்பினாலும் அவரை ஏற்பதற்கு யாரும் தயாரில்லை. கோயம்பத்தூரில் திருமணம் செய்த மனைவியைப் பற்றியும், துபாயில் வைத்து திருமணம் செய்த மனைவியைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. நான்கு மனைவிகள், 12க்கும் மேற்பட்ட குழந்தைகள், துபாயில் செல்வச் செழிப்பான வாழ்க்கை, ஊரில் சொத்துக்கள் என அனைத்தும் இருந்தாலும் ராஜகோபாலுக்கு கை கொடுக்கவில்லை! மனைவிகளிடத்தில் முறையாக நடந்துக் கொள்ளாதது, பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை செலுத்தாதது போன்ற செயல்களால் ராஜகோபாலைப் பார்க்க யாரும் முன் வரவில்லை என புரிய முடிந்தது. வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல் பயணிக்கிறவர்களுக்கு ராஜகோபால் ஒரு பாடம். கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின. என் பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான் போறாங்க, நீங்க அடிக்கடி வந்து போங்க என்று சொன்னது நெஞ்சில் காயத்தை ஏற்படுத்தியது. கட்டுரையாளர்- ஹுசைன் பாஷா (துபாய்)

1 comment: