இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 28, 2010

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக முதன் முதலாக ஒரு முஸ்லிம் தேர்வு மத்திய புதிய தலைமை தேர்த



இந்திய தலைமை தேர்தல் ஆணையராக முதன் முதலாக ஒரு முஸ்லிம் தேர்வு

மத்திய புதிய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் நவீன் சாவ்லா,வியாழக்கிழமையுடன் (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதனால் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷியை தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி உயர்த்தி நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.

இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. குரேஷி தலைமை தேர்தல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார். 1971-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற குரேஷி, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.2006-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நம்பிக்கைக்கு வலுசேர்ப்பேன்தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கூறிய குரேஷி, முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில்நியமிக்கப்பட்டுள்ளதை நான் கெளரவமாக நினைக்கிறேன். நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் எனது செயல்பாடு அமையும் என்றார்.

தினமணி-28-7-2010

No comments:

Post a Comment