இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 28, 2010

சிவசேனா தொண்டர்கள் மிரட்டல்

சிவசேனா தொண்டர்கள் மிரட்டல்: ஆந்திர அணைக்கு பலத்த பாதுகாப்பு உருட்டுக்கட்டைகளுடன் கிராம மக்கள் ரோந்து


சிவசேனா தொண்டர்கள் மிரட்டல்:    ஆந்திர அணைக்கு பலத்த பாதுகாப்பு    உருட்டுக்கட்டைகளுடன் கிராம மக்கள் ரோந்து
நகரி, ஜூலை. 23-
கோதாவரி ஆற்றின் குறுக்கே மராட்டிய அரசு பாப்ளி அணை கட்டுவதற்கு தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் கட்சி நிர்வாகிகள் 74 பேருடன் பாப்ளி அணையை பார்வை யிட சென்றபோது மராட்டிய போலீசார் அவரை கைது செய்து சிறை வைத்தனர். இதனால் ஆந்திராவில் கலவரம் வெடித்தது. ஏராளமான பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து கைதான அனைவரையும் மராட்டிய அரசு விடுவித்தது.
இந்த நிலையில் சிவசேனா தொண்டர்கள் ஆந்திரா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சலூரா அணை மராட்டியத்திற்கு சொந்தமானது என்று கூறி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் நேற்று சலூரா அணைக்கு திரண்டு வந்தபோது மராட்டிய போலீசார் கைது செய்தனர்.
சிவசேனா தொண்டர்கள் சலூரா அணைக்கு திரண்டு வருவதை அறிந்ததும் அப்பகுதி ஆந்திர கிராம மக்கள் உருட்டுக்கட்டைகளுடன் அணையில் திரண்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அவர்கள் கூறும் போது, மராட்டியர்கள் யாராவது இங்கு வந்தால் அடித்தே கொன்று விடு வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்கு ஆந்திராவை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாப்ளி அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஆந்திரா - மராட்டியம் எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாப்ளி அணை அமைந்துள்ள நாந்தேடு மாவட்டத்தில் மராட்டிய போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். அங்குள்ள கிராம மக்களும் அணையில் பயங்கர ஆயுதங்களுடன் அணை பகுதியில் சுற்றி வருகிறார்கள். இந்த அணை விவகாரம் ஆந்திரா - மராட்டிய அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

No comments:

Post a Comment