இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 28, 2010

ரஞ்சிதாவை மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்போம்;

ரஞ்சிதாவை மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்போம்; நித்யானந்தா சீடர்கள் அறிவிப்பு
ரஞ்சிதாவை மீண்டும்    ஆசிரமத்தில் சேர்ப்போம்;    நித்யானந்தா சீடர்கள் அறிவிப்பு
சென்னை, ஜூலை. 27-
தமிழ்நாடு நித்யானந்தா தியான பீடம் சார்பில் மூத்த சாமியார் முத்து சதானந்தா, தியான முகாம்களின் செயல் தலைவர் டாக்டர் ஞானானந்தா ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
கடந்த 25-ந்தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடந்த குருபூர்ணிமா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நித்யானந்தாவிடம் ஆசி பெற்றனர்.
கடந்த 4 மாதங்களாக நித்யானந்தா பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்கு புறம்பாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
அகிம்சையை கடை பிடியுங்கள், அமைதியாக இருங்கள், தர்மம் வென்றே தீரும் என்று நித்யானந்தா சொன்ன ஒரே வார்த்தைக்காக இது வரை அமைதியாக இருந்தோம்.
ஆனால் நேற்று மாலையில் தனியார் டி.வி. ஒன்றில் எங்கள் குருநாதர் மனம் புண்படும் வகையில் போலி சாமியார் என்று செய்தி ஒளிபரப்பானது.
குரு பூர்ணிமா விழாவில் கணவர்-குழந்தையோடு பங்கேற்ற எங்களது பக்தர் நடிகை மாளவிகாவை கொச்சைப்படுத்தி செய்தி ஒளிபரப்பினார்கள். இதை கண்டிக்கிறோம். இந்து தர்மத்தையும், தமிழக கலாச்சாரத்தை காப்பாற்றும் பணியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
கேள்வி:- நித்யானந்தா- நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதே? இதுதான் தமிழ் கலாச்சாரத்தையும், இந்து தர்மத்தையும் காப்பாற்றுவதா?
பதில்:- சாமியார் தொடர்பான அந்த காட்சி பொய்யானது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை.
கேள்வி:- வீடியோ காட்சி பொய்யானது என்றால் நித்யானந்தா ஏன் தலைமறைவாக வேண்டும்?
பதில்:- அப்போது எங்களது நிலைமை முள்ளில் மீது விழுந்த சேலை போல இருந்தது. அதை பத்திரமாக எடுக்க வேண்டிய கடமையில் இருந்தோம். இருப்பினும் தனது நிலையை விளக்கி நித்யானந்தா பேசி அனுப்பிய 2 வீடியோ காட்சிகள் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கேள்வி:- நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தால் ஏற்று கொள்வீர்களா?
பதில்:- யார் வந்தாலும் ஏற்று கொள்வோம். மடத்தின் காவலாளியாக நாங்கள் இருந்தால் அவரை எந்தவித மறுப்பும் சொல்லாமல் அனுமதித்து விடுவோம்.
கேள்வி:- ரஞ்சிதா கடைசியாக எப்போது ஆசிரமத்துக்கு வந்தார்?
பதில்:- ஜனவரி மாதம் கடைசியாக அவரை ஆசிரமத்தில் பார்த்துள்ளோம்.
கேள்வி:- அவர் ஆண்மை இல்லாதவர் என்றும், பாலியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானதே?
பதில்:- இதுபோன்ற செய்திகளில் துளி அளவும் உண்மை இல்லை. நித்யானந்தர் வெளியிட்ட 2 சி.டி.க்களிலும் இந்த வார்த்தைகள் எதுவும் இடம் பெறவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின் போது சாமியாரின் சீடர்கள் டாக்டர்கள் நித்து ரூபானந்தா, பெண் சன்னியாசி பயிற்சி முகாம் தலைவி என்ஜினீயர் நித்து சுப்ரியானந்தா, நித்தியதேவி, தியான பீடத்தின் மக்கள் தொடர்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.


thanks :- http://www.maalaimalar.com/2010/07/27151328/tamil-actress-ranjitha.html

No comments:

Post a Comment