இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 6, 2010

ஏசாதீர்கள்...(நபிமொழி) நற்சிந்தனைகள் - 2

பொன்மொழிகள்
திங்கள், 01 மே 2006 13:26

'' 'என்னை நேரில் கண்ட முஸ்லிமையும், இவரை எவர் கண்டாரோ அவரையும் நரகம் தீண்ட மாட்டாது' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதீ

'' 'என் தோழர்களை ஏசாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக, எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக! உஹத் மலை அளவு தங்கத்தை எவர் தர்மம் செய்த போதினும், அவர்களில் ஒருவருடைய நன்மையை யும் அவர் அடையப் போவதில்லை. அன்றி, அதில் பாதி அளவும், அவர் அடையப் போவதில்லை' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

'' 'தியாகியை (ஷஹீதாகக் கூடியவரை) இந்த மண் மீது நடமாடப் பார்க்க விரும்பும் எவரும் தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளவும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதீ

'' 'நிச்சயமாக! ஒவ்வொரு நபிக்கும் சில குறிப்பிட்ட சீடர்கள் உண்டு. நிச்சயமாக, என்னுடைய குறிப்பிட்ட சீடர் ஜுபை ருப்னுல் அவாம் (ரலி) அவர்கள்தாம்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ

''ஸஃது (ரலி) அவர்களைத் தவிர வேறு எவர் மீதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதை நான் செவியுற்றதில்லை. உஹத் யுத்த நாள் அன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'ஸஃதே! அம்பு எய்யும். என் தாய் தந்தை உம் மீது அர்ப்பணமாகுக!' என்று கூறியதை நான் செவியுற்றேன்.'' அறிவிப்பவர்: அலீ (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ

'' 'ஜஃபர் (ரலி) அவர்கள் சுவனபதியில் வானவர்களுடன் பறந்து செல்வதை நான் கண்டேன்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதீ

தொகுப்பு: அபூ ஸாலிஹா

No comments:

Post a Comment