இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 16, 2010

ஜவேரி சகோதரர்கள்



மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி.


போர்பந்தர்! இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.


அப்ல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்ல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.


1893_ம் ஆண்டு அப்ல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது

இளைஞர். அவர் பண்பு அப்துல் கரீம் அவர்களை கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுண்ட்.


அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களுக்கு அப்போது தெரியாது.


கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந் ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.


1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.


1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.


காந்தி டர்பனுக்குள் நுழைவத விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்கள பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்லை. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.


இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.


‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது.


அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்ல்துலா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தை கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்லை ’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.


1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.


அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியான. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.
முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந் முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுக்கப்பட்டது. அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.


சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே ஏராளமான சொத்துக்களை இழந்து விட்டனர். ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது.


உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அத லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.


சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி படம் இடம் பெற்றிருந்தது. வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி இவர்களது குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் உள்ளது.

thanks :- http://masjid-al-taqwa.blogspot.com/

No comments:

Post a Comment