இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 7, 2010

தினந்தோறும் இறைவனைத் தொழுவதிற்கு

தினந்தோறும் இறைவனைத் தொழுவதிற்கு பத்து வழிவகைளைக் கூறலாம் என நினைக்கிறேன்

1) கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுது கொள்ளுங்கள்.

2) தொழ முடியாத நேரத்தில் இறைவனை நினைத்து தஸ்பி எண்ணிக் கொள்ளுங்கள்.

3) அல்லாஹ்வினை நினைத்து உங்கள் மொழியில், தெளிவான வேண்டுகோளை வையுங்கள்.

‎4) உங்கள் தேவைகளை நிறைவேற்றவே தொழவேண்டும் என நினைத்துத் தொழவேண்டாம்.
உங்களைப்படைத்து தொழ வாய்ப்புக்கொடுத்து உயிரோடு இருக்கச்செய்ததிற்காகவாது தொழுங்கள். சிறு உதவிகளைச் செய்யும் மானிடருக்கு விழுந்து, விழுந்து நன்றி சொல்லும் போது அழகான மனித உயிரினை உங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.

5) உங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது என்று நாற்காலியில் இருந்து தொழவேண்டாம். கூடுமானவரை குனிந்து, நிமிர்ந்து, இறைவனுக்கு ஸஜ்தா செய்து தொழுக முயற்சி செய்யுங்கள்.

6) நீங்கள் தொழும் போது இறைவனின் குறை தீர்க்கும் சக்தி மீது அவ நம்பிக்கை கொள்ளாது, அல்லாஹ்தான் எல்லாக் குறைகளையும் களையும் வல்லமை மிக்கவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.

7) சாதாரணமாக இறைவன் நாம் கேட்கும் பலனுக்கு மேலாக பன் மடங்கு பலன் கொடுப்பவன். அவன் கொடுக்கும் பலன் எதுவானாலும் அது அருட்கொடை என ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.

8) நமது குடும்ப தேவைகளை புறக்கணித்து இறைதளமே கதியென வாளாதிருக்கக்கூடாது. எந்த மதமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆகவே நீங்கள் தேவைகளைப் ப+ர்த்தி செய்யும் நல்ல கணவராக மனைவிக்கும், சிறந்த தந்தையாக பிள்ளைகளுக்கும், பேணிக்காக்கும் மகனாக உங்கள் வயதான பெற்றோர்களுக்கும் காட்சி தரவேண்டும்.

9) உடன் பிறந்தோர்-உற்றார் உறவினர் செய்த தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்றும்., உங்களுக்குத் தீங்கிளைத்தவருக்கும் நன்மை செய்ததின் மூலம் நீங்கள் இறைவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பது நிச்சயமாகிறது.

10) தீர்வுகாண முடியாத செயல்களுக்கு அல்லாஹ்வினிடம் கையேந்தி நாடவேண்டும்.
Thanks :- Althaf Ahamed


இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்
ismail.nishra@yahoo.com

No comments:

Post a Comment