இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 7, 2010

மனித உடம்பு எனும் அதிசய...........

அஸ்ஸலாமு அலைக்கும் ...

மனித உடம்பு எனும் அதிசயம் ..

நாம் எதைஎதையோ அதிசயம் என்று சொல்லுகிறோம் .
ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம் தான் .

* உங்களின் பொது அறிவுக் கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

* மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது ..

* மனித உடம்பில் பெரிய செல் ,பெண்ணின் அண்டம் ,சிறிய செல் ஆணின் உயிரணு .

* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன் படுத்துகிறோம் ..

* சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...

* உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 3எலும்புகள்
இருக்கின்றன..

* நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க
முடியும் ...

* இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன ....

* உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு "பிளேடை " கரைத்து விட முடியும் ...

* வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் ...

* நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை அரை மணி
நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

* உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் ....

* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......


இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்
ismail.nishra@yahoo.com

No comments:

Post a Comment