இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 10, 2010

நோன்பு நோற்பதன் சிறப்புகள் யாவை?

நோன்பு நோற்பதன் சிறப்புகள் யாவை?

1.நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)

2.நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)

3.நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ)

4.நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)

5.நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)

6.நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)

7.நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)

8.நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)

9.நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

10.நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)


2.‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். அறிவிப்பவர் :ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

3.எவருடைய அண்டை வீட்டான் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் சுவனம் செல்லமாட்டார் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


4.“நபி(ஸல்)அவர்கள்‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’என்று கேட்டார்கள்.தோழர்கள்‘இறைத்தூதர் அவர்களே!எங்கள் அனைவருக்குமே(வாரிசுகளின் செல்வத்தை விட)எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’என்று பதிலளித்தார்கள்.‘அவ்வாறாயின்,ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின...் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’என்று நபி(ஸல்) அவர்க

5.“அன்னையரைப் புண்படுத்தவது,(அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்)தர மறுப்பது,(அடுத்தவருக்கு உரியதைத்)தருமாறு கேட்பது,பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.மேலும்,(தேவையின்றி)அதிகமாகப் பேசுவது,அதிகமாகக்(கேள்வி, அல்லது யாசகம்)கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்”என்று நபி அவர்கள் கூறினார்கள்.முஃகீரா(ரலி),புகாரி

No comments:

Post a Comment