இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 8, 2010

இஸ்லாமிய விழாக்களிலும் பெருகி வரும் டிஜிட்டல் கட்-அவுட் கலாச்சரம்

இஸ்லாமிய விழாக்களிலும் பெருகி வரும் டிஜிட்டல் கட்-அவுட் கலாச்சரம்

சமிப காலமாக திருமணம் மற்றும் இஸ்லாமிய வைபவங்களில் ” டிஜிட்டல் போர்டு கலாச்சாரம் பெருகி வருகிறது, திருமணம் நிகழ்ச்சிகளில் குதிரை ஆட்டம் மற்றும் இன்னிசை கச்சேரியுடன் ஊர்வலங்கள் சில ஆண்டுகளுக்கு முன் குறைந்து வந்த நிலையில் சில மாதங்களாக மீண்டும் அரங்கேற்றமாகி வருகிறது, அதனை தொடர்ந்து டிஜிட்டல் போர்டு கலாச்சாரமும் அரங்கேற்றி வருகிறது, ஒரு காலத்தில் பூ மாலை மற்றும் பைத்து சபா இல்லாத திருமணத்தை காண இயலாது அதுபோல் இக்காலத்தில் டிஜிட்டல் போர்ட் இல்லாத திருமணத்தை காண முடியவில்லை,இதில் போட்டி போடும் அளவிற்கு (சைஸிலும்…) அதிகமாகி வருகிறது, மற்றொரு சாராரோ ஆடம்பரம் என்ற பெயரில் திருமணம் என்னும் எளிய ஒப்பந்தத்தை திருவிழாவாக மாற்றி பணத்தை தண்ணீராக வீண்விரயம் செய்கின்றனர்.

இன்றைக்கு,இஸ்லாமி குழந்தை பிறந்த விழா, பெண் பூப்பெய்க்கும் போது எடுக்கப்படும் விழா, கத்னா செய்யும் போது செய்யப்படும் அனாச்சாரங்கள் முதல் திருமண தடபுடல் விரயங்கள் வரை அனைத்திலும் நம்முடைய சமுதாய மக்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

எனவே வல்ல அல்லாஹ் அருளியதைக் கொண்டு மன நிறைவு கொண்டு, மேலும் பொருளாதார வளத்திற்காக அவனிடமே மன்றாடி, அவன் காட்டித் தந்த வழியில் நம்முடைய பொருளாதாரங்களைச் செலவழித்தால் வாழ்க்கை பூந்தோட்டமாக அமையும், இன்ஷா அல்லாஹ். அதற்கான பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக!

———————————————————————————————–
(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்அன்)
———————————————————————————————-
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும், நாம் அதிலுள்ள அனைத்தையும் நிச்சயமாக (ஒருநாள்) அழித்துப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்-குர்ஆன் 018:007-008)இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்

No comments:

Post a Comment