இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 13, 2010

அன்புச்சகோதரர்களுக்கு :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


உங்கள் கண் முன் உதவி தேடுபவுருக்கு உதவி செய்யுங்கள்

உதவி செய்தவருக்கு நன்றி என்ற மூன்று வார்த்தையை சொல்லுவதோடு மட்டுமில்லாமல் நாமும் பிறருக்கு உதவி என்ற மூன்று வார்த்தையை தொடர்து செய்ய வேண்டும்....,

பலனை எதிர் பார்த்து உதவி செய்யாதே..,

உணவு வேண்டி கேட்போர்க்கு உணவு கொடுத்து உதவுங்கள்

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!

பார்வை இல்லாதவர்களுக்கு வழிகாட்டியாய் இரு, ஊனமுற்றோருக்கு ஊன்று கோலாய் இரு..,

நீயும் உதவி செய்து மற்றவர்களையும் உதவி செய்ய தூண்டு. அதில் கிடைக்கும் சந்தோஷம் கடலை நீலமானது. மலையை விட உயரமானது...

அம்மா!...
அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிறிக்க அல்ல.....
அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்.....

தன்னை அறிந்தவன் ”ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன் ”கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன் ”கஷ்டப்" படமாட்டான்

thanks :- Siraj Jack (my friend)


இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்
ismail.nishra@yahoo.com

No comments:

Post a Comment