இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 20, 2010

இன்றைய சூழலில் முஸ்லீம் பெண்கள்



தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் மனதிற்கு கவலை அளிக்கின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நடந்து வரும் முஸ்லீம்களே முஸ்லீம்களை அழிக்க நினைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. தென் மாவட்டங்களில் (தூத்துக்குடியில் சிறுவன் கழுத்தறுத்துக் கொலை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பாலியல் சம்பவங்கள்) சமீப காலத்தில் கடன் சம்பந்தமாக இருவேறு சகோதரிகள் சீரழிக்கப்பட்டு, வீடியோ படம் எடுத்து மிரட்டக்கூடிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசியல் பலம், அதிகார பலம், அடியாள் பலம், காவல்துறை பலம் என்று பலவிதமான பலங்களைக் கொண்டும் இந்த வேலையை செய்யும் அக்கிரமக்காரர்கள் எந்த செயலை செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கூச்சப்படும் சந்தர்ப்பத்தை பயண்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர்.
இதற்கான காரணமும், இதற்கான தீர்வும் எண்ண என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் சங்க் பரிவார்களிடமும் இருந்தும், காவி மனிதர்களிடமிருந்தும் நம் முஸ்லீம் பெண்களை காக்க வேண்டும் என்று நம் சமுதாய வாலிபர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில இடங்களில் நம் சமுதாய மக்களே இப்படிப்பட்ட வக்கர வேலைகளில் ஈடுபடுவது நம் சமுதாய மக்களுக்கும், நம் சமுதாய வளர்ச்சிக்கும், நம் மார்க்க வளர்ச்சிக்கும் ஆரோக்கியமானது அல்ல என்பதை மட்டும் இந்த வேளையில் கூறிக் கொள்கிறேன்.

ஆடம்பர வாழ்வும், திட்டமிடாமல் வாழ்வதும், பகட்டிற்காக அதிக கடனை வாங்குவதும், தவணை முறை என்பதால் இலகுவாக பொருட்களை வீட்டிற்குள் சேர்த்து விடலாம் என்ற காரணத்தினாலும் சில பெண்கள் கடன் வாங்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சில நேரங்களில் வட்டி கொடுக்க முடியாமலும், சில நேரங்களில் முழுத் தொகை கேட்டு கொடுக்க முடியாமலும் இருக்கும் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு பெண்களை பாலியல் கொடூரம் செய்யும் வக்கிர புத்திக்காரர்கள் அதிகமதிகம் காணக்கிடக்கின்றனர்.

என்ன செய்யலாம்:

இதனால் நாம் எல்லோரும் கடனே இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்லவில்லை. ஆனால் திட்டமிடுகின்ற வாழ்க்கையும், கடன் அடைக்கூடிய சூழ்நிலை இருந்தால் மட்டும் கடன் வாங்குதல் போன்ற தகுந்த முன்னேற்பட்டால் இதை போன்ற வக்கிரக்காரர்களிடமிருந்து நாம் நம்மையும் நம் சமுதாயத்தையும் காத்துக் கொள்ளலாம். தவிர வட்டிக்கு கடன் வாங்கும் போக்கை தயவு கூர்ந்து நம் சமுதாய மக்கள் கைவிட வேண்டும், சிலர் ஊரில் வட்டிக்கு கடன் வாங்கினால் தான் பாவம், அரபு நாடுகளிலுள்ள வங்கிகளில் loan (அதற்கு பெயரும் வட்டிக்கு கடன் தான்) எடுத்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை, இந்த காலத்தில் loan எடுக்காமல் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுமளவிற்கு சென்று விட்டார்கள்.

இது தவிர வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள். .அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் உங்கள் குடும்பத்து பெண்களிடம் கூறுங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள். அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

மார்க்கத்தில் சொல்லப்பட்ட மஹரமான ஆண்களிடம் மட்டுமே பெண்கள் ஹிஜாப் இல்லாமல் பேச வேண்டும் என்பதையும் எக்காரணம் கொண்டும் அந்நிய ஆண்களை தங்கள் வீட்டிற்கு தனியாக இருக்கும் நேரங்களில் எந்த வேலையாக இருந்தாலும் அனுமதிக்க கூடாது என்பதையும் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் சொல்லி புரிய வையுங்கள். பல இடங்களில், மாற்றுமத சகோதரர்கள் நம் முஸ்லீம் சமுதாய வீடுகளுக்கு சாதாரணமாக வந்து போவதும், கொடுக்கல் வாங்கலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆண்கள் இல்லாத வீடுகளாக இருந்தால், இதற்கு நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் இலலாவிட்டால் விபரீதம் என்று அறியும் முன்பே சில சம்பவங்கள் நடந்து முடிந்து விடும்.

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆன்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

சமீபத்தில் என்னிடம் பேசிய சென்னை நண்பர் கூறியது: வரக்கூடிய காலங்களில் பெண் பிள்ளைகளை வளர்ப்பது என்பது பெரிய போராட்டமாகி விடும் போல இருக்கிறது, அந்தளவுக்கு மிகவும் நிலைமை மோசமாக இருக்கிறது என்றார். இது நகர வாழ்க்கையில் தான் என்றால் சில கிராம பென்களும் நாங்கள் இதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல் வாழ்ந்து காட்டுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் சமுதாயம் அலட்சியமாக விட்டால் புற்று நோய் போல பரவி நம் சமுதாயத்தின் நிலைமையை சீர்குலைத்து விடும் என்பதில் சமூக ஆர்வலர்களும், சமுதாய தலைவர்களும், சமுதாய கண்மனிகளும் கவனம் கொள்க.

இதை போன்ற செயல்களால் மாற்று மத நண்பர்களிடமும் செய்யும் தாவா பணிகளும் பாதிக்கப்படுகிறது என்பது கூடுதல் செய்தி

தோழமையுடன்

அபு நிஹான்
Posted b

No comments:

Post a Comment